• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேபிஆர் மில்ஸ் நிறுவனத்தின் புதிய உள்ளாடைகள் பாஸோ அறிமுகம்

May 12, 2022 தண்டோரா குழு

கேபிஆர் மில்ஸ் நிறுவனத்தின் புதிய உள்ளாடைகள் “பாஸோ” (FASO) அறிமுக விழா கோவையில் நடந்தது.புதிய ஆடைகளில் கலெக்சன்களின் அறிமுகம் கோவை லி மெரிடியன் ஓட்டலில் நடந்தது.

தென்னிந்திய அளவிலானசில்லறை விற்பனையாளர்கள், சந்தைவிநியோகஸ்தர்கள் பங்கேற்றனர்.ப கேபிஆர் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கேபிஆர் ராமசாமி புதிய பொருளை அறிமுகப்படுத்தினார்.நிர்வாக இயக்குனர் பி.நடராஜ்,செயல் இயக்குனர்கள் சிஆர் அனந்தகிருஷ்ணன், இ.கே சக்திவேல் மற்றும் என். அருண் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

2022-23ம் ஆண்டுக்கான வணிக திட்ட அறிக்கையை துணைத்தலைவர் டி. கோகுலகிருஷ்ணன், “எதிர்காலத்தில் பயணிப்போம்” என்ற தலைப்பில் சமர்ப்பித்தார். ஆண்டு வணிக சந்திப்பு 2022 புதிய ஆர்டர்கள் மற்றும் சிறப்பான இரவு விருந்துடன், இனிதாக நடந்தது.புதிய உள்ளாடைகளை அறிமுகம் செய்து, கேபிஆர் குழுமத்தின் தலைவர் கே.பி ராமசாமி பேசியதாவது:

பாஸோ சில்லறை விற்பனை பிராண்ட் 2019ம் ஆண்டில் அறிமுகப்படுத்தட்டது. தென்னிந்திய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது,பின்னுாட்டம் வயிலாக அறியப்பட்டுள்ளது.இந்திய அளவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.ஆண்கள் உள்ளாடையில் பாஸோ இயற்கையான பருத்தி, மென்மையான வசதி மற்றும் தோலுக்கு நட்பான தன்மை போன்றவைகள் இதன் சிறப்பம்சங்கள். இது, இந்திய உள்ளாடை சந்தையில் புதிய நிர்ணயத்தை ஏற்படுத்துவதோடு, இந்திய வாடிக்கையாளர்களுக்கு வசதியான தரமான பொருளாக இருக்கும்.

முதன்மை சேகரிப்பானது மிக முக்கியமானது. தற்காலத்துக்கு ஏற்ற வகையில் மென்மையான தன்மை, உயர் இழுதிறன் மற்றும் உயர்வான தரம், மிக துல்லியமான வடிவமைப்பு போன்றவை சிறப்பான வசதிகள் போன்றவை எங்களது தயாரிப்பின் மிக முக்கிய அம்சங்களாகும். இவ்வாறு, அவர் பேசினார்.

மேலும் படிக்க