• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குழந்தைகள் ஆபாச வீடியோ தொடர்பாக தமிழகத்தில் முதல் கைது

December 12, 2019

பேஸ்புக்கில் குழந்தைகளின் ஆபாச வீடியோ பதிவேற்றம் செய்ததாக திருச்சி காஜாப்பேட்டையை சேர்ந்த 42 வயதான ஏசி மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் என்பவரை தனிப்படை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இவர் மீது போக்சோ சட்டத்தில் 3 பிரிவுகள், தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் 2 பிரிவுகள் என மொத்தம் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபர் திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்பு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.ஐடிஐ படித்து விட்டு ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார்.

மேலும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள அல்போன்ஸ்ராஜ், முகநூல் மெஜேஞ்சரில் தனியாக குழு நடத்தி, அதில் வீடியோக்களை பகிர்ந்துள்ளதும். சிலர் வீடியோக்களை அனுப்பியுள்ளதும் தெரிய வந்துள்ளது.இந்த குழுவில் உள்ள 100 க்கும் மேற்பட்ட பெயர் கொண்ட பட்டியலை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க