• Download mobile app
18 Oct 2021, MondayEdition - 2077
FLASH NEWS
 • வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய தளங்கள் இயங்குவதில் பாதிப்பு
 • பள்ளிகளை திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
 • ரூ.1 லட்சம் அபராதத்தை நிவாரண நிதியாக தர விருப்பமில்லை: நடிகர் விஜய் தரப்பில் விளக்கம்
 • பெகாஸஸ் உளவு மென்பொருளை இந்திய அரசு வாங்கியதா, இல்லையா? – ராகுல் காந்தி
 • தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
 • திருநங்கைகளுக்கு ரூ.1,500 உதவித்தொகை: மத்திய அரசு அறிவிப்பு
 • ரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது !
 • நடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு
 • அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு!
 • 2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்
 • “அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முல்மினா பானம் !

September 18, 2021 தண்டோரா குழு

ஜக்டேல் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட்டின் பிரிவான ஜக்டேல் ஹெல்த்கேர் சமீபத்தில் அவர்களின் பிரபலமான சுகாதார பானமான முல்மினா குறித்த மருத்துவ ஆய்வின் முடிவுகளை வெளியிட்டது. இது குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரின் நுகர்வுக்கு ஏற்றது. முல்மினா இயற்கையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டது மற்றும் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.

இது நோய் எதிர்ப்பு திறன் மற்றும் ஊட்டச்சத்துக்களைக் கொண்ட குடிக்க தயாராக இருக்கும் ஒரே பானமாகும். இந்த பானத்தின் உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்பு மற்ற சுகாதார பானங்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக அமைகிறது என்பதை ஆராய்ச்சி நிரூபித்துள்ளது.

தற்போது நிலவி வரும் தொற்றுநோயை அடுத்து, மக்கள் மேலும் அதிகமாக ஆரோக்கியத்தை சீரமைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளைத் தேடுகிறார்கள். உலகளாவிய கோவிட் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள சுகாதார நிறுவனங்கள் நோயை தடுப்பதற்கான சாத்தியங்களையும் அதை குணப்படுத்தும் முறையையும் ஆராய்கின்றன.

துரதிர்ஷ்டவசமாக, தங்கள் குழந்தைகளை கொரோனா வைரசிலிருந்து காப்பது குறித்து அக்கறை கொண்ட பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான அடிப்படை சுகாதாரப் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றாமல் தாமதப்படுத்தியும், புறக்கணித்தும் அவர்களை தொற்றுநோய்க்கு ஆளாக்கியுள்ளனர். மஞ்சள், கோட்டு குலா போன்ற ஆயுர்வேத மருந்துகள் மாம்பழத்துடன் இணைந்து நன்கு ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இப்போது இது 7 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் ஒரு உறுதியான பங்கு இருப்பதாக மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு, மல்லிகே மருத்துவமனை, குழந்தை நல மருத்துவர் ஆலோசகர் சௌமியா நாகராஜன் கூறுகையில்,

“இந்த ஆய்வு மாம்பழம், கோட்டு கோலா மற்றும் மஞ்சள் ஆகியவற்றை தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களுடன் இணைந்து சுவாசக்குழாய் நோய்த்தொற்று உள்ள நோயாளிகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் பயன்படுத்தும்போது, குறிப்பிட்ட கால இடைவெளியில் இரத்தப் பகுப்பாய்வு மூலம் நிரூபிக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆக்ஸிஜன் அளவு அதிகரிப்பைக் காட்டுகிறது. ஊட்டச்சத்து மருந்துகள் எவ்வாறு சிகிச்சையில் துணைக்கருவிகளாக செயல்படும் என்பது பற்றிய மேலதிக ஆய்வுகளுக்கு இது வழிகாட்டும் எனத் தெரிவித்தார்.

இந்த மருத்துவ ஆய்வானது புகழ்பெற்ற மருத்துவ நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சுவாச நோய்த்தொற்றுள்ள குழந்தைகளும் முல்மினா மாம்பழம் (மா, கோட்டு கோலாசெண்டெல்லா ஆசியாடிகா மற்றும் மஞ்சள் ஆகியவற்றின் கலவை) மூலம் நிர்வகிக்கப்ப்பட்டது. நிலையான சிகிச்சை நெறிமுறையுடன் 14 மற்றும் 28 நாட்களில் ஆக்ஸிஜனேற்ற குறிப்பான்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறிப்பான்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியது. கூடுதலாக, இந்த ஆய்வுகள் சி – ரியாக்டிவ் புரதம் (சிஆர்பி) போன்ற அழற்சி குறிப்பான்களைக் குறைப்பதாகவும், மொத்த ஆக்ஸிஜனேற்ற திறனை அதிகரிப்பதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஜக்டேல் இண்டஸ்ட்ரீசின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் ஜக்டேல் பேசுகையில்,

“உலக அளவில் விஞ்ஞான ரீதியாக ஆராய்ச்சி செய்யப்பட்ட தயாரிப்புகளை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அவை மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளன மற்றும் மக்களின் பொதுவான வாழ்க்கை முறைக்கு எளிதில் பொருந்தக் கூடியவை ஆகும். அனைவரின் நலனுக்காகவும் உண்மையான அறிவு பகிரப்பட வேண்டும் என்றார்.

மேலும் படிக்க