• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குறைந்த கட்டணத்தில் தீவிர சிகிச்சை பராமரிப்பு சேவைவையை சிபாகாவுடன் இணைந்து துவக்கிய இந்துஸ்தான் மருத்துவமனை !

August 2, 2021 தண்டோரா குழு

தீவிர சிகிச்சை பிரிவு பராமரிப்பில் பிரபலமான சிபாகா,கோவை இந்துஸ்தான் மருத்துவமனையுடன் இணைந்து குறைந்த கட்டணத்தில் தரமான தீவிர சிகிச்சை பராமரிப்பு சேவையை துவக்கியது.

தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் தீவிர சிகிச்சை பிரிவை அமைப்பதிலும் நிர்வகிப்பதிலும் சிபாகா முக்கிய பங்கு வகித்து வருகின்றது.இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவ சேவை வசதியில் முக்கிய பங்கு வகிக்கும் கோவையில் முதல் முறையாக சிபாகா தனது சேவையை துவக்கியுள்ளது.

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் மருத்துவமனையுடன் இணைந்து சிபாகா கோவையில் தனது சேவையை துவக்கி உள்ளது. இதற்கான துவக்க விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. மருத்துவமனையின் செயல் இயக்குனர் சதீஷ்பிரபு மற்றும் சிபாகா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜா அமர்நாத் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில் மருத்துவர்கள் அஸ்வதி,ராஜா மாரிமுத்து, ராமலிங்கம்,வினோத்,ஜெயமோகன் நவநீதன் மற்றும் மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

சிபாகா தீவிர சிகிச்சை பராமரிப்பு சேவை குறித்து அதன் இயக்குனர் ராஜா அமர்நாத் கூறுகையில்,

கோவிட் -19 தொற்று காரணமாக முக்கியமான பராமரிப்பு சேவைகளுக்கான தேவை என்பது பன்மடங்கு அதிகரித்து வருவதாகவும்,இந்த சேவையால்,இந்துஸ்தான் மருத்துவமனை கோவைக்கு அருகில் உள்ள கிராமப்புற மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான தீவிர சுகாதார சேவையை நோயாளிகள் பெற முடியும் என தெரிவித்தார்.

குறிப்பாக கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கு வசதியில்லாத,குறைந்த பொருளாதார நிலைகளில் உள்ள நோயாளிகளுக்கு தரமான தீவிர சிகிச்சை சேவைகளை வழங்குவதே இதன் முக்கிய நோக்கம் என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க