October 13, 2023
தண்டோரா குழு
பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று கோவை மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக வரும் 14ம் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணிவரை பொது விநியோகத் திட்ட குறைதீர் சிறப்பு முகாம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் இயங்கிவரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.
மேற்படி, குறைதீர் முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம்,அலைபேசிஎண் மாற்றம் மற்றும் நகல் குடும்ப அட்டைகள் பெறுதல் தொடர்பான குறைகளை மனுக்களாக வழங்கி பொதுமக்கள் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.