 August 2, 2021
August 2, 2021  தண்டோரா குழு
தண்டோரா குழு
                                குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு நாளை (ஆக.3) முதல் 6-ம் தேதி வரை சூலூர் விமான நிலைப் பகுதியில் பறக்கும் கலம் (டிரோன்) பறக்க தடை விதிக்கப்படுகிறது என்று கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை கோவை மாவட்டம் சூலூர் விமான நிலையம் வருகிறார். அதனையொட்டி, பாதுகாப்பு கருதி, சூலூர் விமான நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பறக்கும் கலம் பறக்க தடை விதிக்கப்படுகிறது. 
இதனை மீறி யாராவது பயன்படுத்தினால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.