• Download mobile app
15 Jul 2019, MondayEdition - 1251
FLASH NEWS
  • “நியூசிலாந்து போல திமுக தோற்கும்!” – அமைச்சர் ஜெயக்குமார்
  • தொழில் நுட்பக் கோளாறு.. கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2’…!
  • பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக டெல்லியில் 14 பேர் கைது

கிணற்றுத் தவளைகளாக உள்ள கம்யூனிஸ்ட்டுகள் மக்களைக் குழப்பி வருகிறார்கள் – சி.பி.ராதாகிருஷ்ணன்

April 15, 2019 தண்டோரா குழு

ஜி.எஸ்.டி-யால் தொழிற்நிறுவனங்கள் பெரிதளவு பாதிக்கபட்டுள்ளதாக பொய் பிரச்சாரத்தைக் மேற்கொண்டு வருவதாக பாஜக சார்பில் கோவை மக்களவை தொகுதி வேட்பாளர்களாக போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த கோவை பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்,

“குழப்பத்தின் உச்சத்தில் இருக்கின்ற எதிர் அணியினர் ஜி.எஸ்.டி-யால் தொழிற்நிறுவனங்கள் பெரிதளவு பாதிக்கபட்டுள்ளதாக பொய் பிரச்சாரத்தைக் மேற்கொண்டு வருகிறார்கள். ஒரே இரவில் இந்தியா முழுவதும் உள்ள செக் போஸ்டைக் தூக்கி எறிந்தவர் பிரதமர் மோடி மட்டுமே. ஜி.எஸ்.டியால் எதையெல்லாம் சரிசெய்ய வேண்டுமோ அதையெல்லாம் தொழிற் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று ஒன்றன்பின் ஒன்றாக சரி செய்து வருகிறார்கள்.கிணற்றுத் தவளைகளாக உள்ள கம்யூனிஸ்ட்டுகள் மக்களைக் குழப்பி வருகிறார்கள். வெட் கிரைண்டருக்கு விதிக்கப்பட்டிருந்த 28 சதவிகித ஜி.எஸ்.டி 12 சதவிகிதமாக குறைக்கபட்டுள்ளது. சாலையோரங்களில் கடை வைத்திருந்த 23,788 பேர் முத்ரா கடன் திட்டத்தில் பயனடைந்திருக்கிறார்கள். சொத்துகளை அடமானம் வைக்காமல் ஏழை எளிய மக்களுக்கு கடம் வழங்கியுள்ளது மோடியின் சிறப்பான அரசு.கோவைக்கு நாம் இராணுவ தொழில்நுட்ப பூங்காதான் கேட்டோம். ஆனால், மத்திய அரசு இராணுவ தொழிற்பேட்டையையே கொடுத்துள்ளார்கள்.

சிறு,குறு தொழில் வளர்ச்சி இல்லாமல் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி கிடையாது. தி.மு.க ஆட்சி இருக்கும் போது 14 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. தற்போது மின்வெட்டு பிரச்சனையே இல்லை. மின்வெட்டை சரி செய்ய முடியாத இவர்கள், தொழில் வளர்ச்சியைப் பற்றி பேசத் தகுதியற்றவர்கள். தமிழகம் எங்கேயும் புறக்கணிக்கப்படவில்லை. பா.ஜ.க ஆளும் மாநிலங்களைவிட, தமிழகத்தில் பத்து ஸ்மார்ட் சிட்டி நகரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை விமான நிலையம் விரிவாக்கத்திற்குப் பிறகு கோவை விமான நிலையம். பிரமாண்டமாக உருவெடுக்கும். அப்போது ஏற்றுமதி தொழில் செய்பவர்கள் பயனடைவார்கள்.

கோவையிலிருந்து சென்னை, திருவனந்தபுரம் , பெங்களூருக்கு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு அதிக ரயில்கள் இயக்கப்படும்.யார் என்ன சொன்னாலும் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெறும். நீர் ஆதரங்களை சரி செய்ய அதிக கவனம் செலுத்தி நீர் ஆதாரங்களைப் பெருக்குவோம். சின்னவேடம்பட்டியில் அமைந்துள்ள 200 ஏக்கர் பரப்புள்ள ஏரியை அதிக நிதி பெற்று தூர் வார நடவடிக்கை எடுப்போம். ஜி.எஸ்.டியால் தான் அதிக தொழிற்நிறுவங்கள் மூடி கிடப்பதாகச் சொல்வது பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டு.காவிரி நதி நீர் ஆணையத்தைக் தூக்கி எறிவோம் என்று காங்கிரஸ் கட்சியினரைக் தங்களது அறிக்கையில் சொல்லியுள்ளார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க