• Download mobile app
28 Oct 2025, TuesdayEdition - 3548
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவலர்கள் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் – கோவை ஆணையர்

July 7, 2020 தண்டோரா குழு

கொரானா தொற்று காலத்தில் காவலர்கள் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என காவலர்களுக்கு கோவை மாநகர காவல் ஆனையர் சுமித்சரண் அறிவுறுத்தியுள்ளார்.

கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் காவல் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,

கொரோனா தொற்று காலத்தில் கோவை மாநகர காவல் துறை சிறப்பாக செயல்பட்டு உள்ளது. ஒரு சிறிய தவறு செய்த அனைத்து நல்ல விஷயங்களை மறக்கடித்து விடும் எனவும் வரும் நாட்களில் கவனமுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். கோவை மாவட்டத்தில் காவலர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றி உள்ளதாகவும் இனி வரும் காலங்களில் இன்னும் கவனமுடன் பணியாற்ற வேண்டும் என்றார்.

மேலும்,கொரோனா தொற்று குறைந்து வந்து நிலையில் தற்போது அதிகரித்து உள்ளது.காவலர்களுக்கு வைரஸ் தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சோதனை செய்து கொள்ள வேண்டும். நமக்காக மட்டுமல்லாமல் உடன் பணியாற்றும் சக ஊழியரின் நலன் கருதி இதனை செய்ய வேண்டும். பயம் காரணமாக சிலர் தயங்குவதாகவும் இதில் பயப்பட ஒன்றுமில்லை தானாக முன்வந்து சோதனை செய்து கொண்டு தனிமை படுத்தி கொள்ளவேண்டும்.
அதிகாரிகளுடன் மனம் விட்டு பேசுவதுடன் கடமையை சிறப்பாக செய்வதுடன் பொறுப்பாகவும் பொறுமையாகவும் பணியை மேற்கொள்ள வேண்டும்.ஜூலை மாதம் சற்று கடினமாக இருக்கும். தினமும் வாகனத்தை சுத்தம் செய்தல் கிருமி நாசனி தெளித்தல் உள்ளிட்டவைகளை மேற்கொண்டு பாதுகாப்பாக செயல்பட வேண்டும். காவல் துறை இதுவரை சிறப்பாக செயல்பட்டு உள்ளது. பொதுமக்களிடம் பாராட்டுகள் வருகிறது. வாகன சோதனை கொரோனா தடுப்பு பணியில் உள்ளவர்கள் சகிப்பு தன்மை கொண்டு செயல்பட வேண்டும். அனைவருக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

இதன் பின்னர் காவல் அதிகாரிகளுக்கு முக கவசங்களை வழங்கினார். இந்த நிகழ்வில் சட்டம் ஒழுங்கு உதவி ஆணையாளர் பாலாஜி சரவணன்,குற்றபிரிவு துனை ஆணையர் உமா,போக்குவரத்து துனை ஆனையர் முத்தரசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதில் காவல் நிலையை ஆய்வாளர்கள் துனை ஆணையர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க