• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காந்தியின் அஸ்தி கலச நினைவு மண்டபத்தில் காமராஜ் மக்கள் இயக்கம் சார்பாக மலரஞ்சலி

October 2, 2023 தண்டோரா குழு

கோவை பேரூர் பகுதியில் உள்ள காந்தியின் அஸ்தி கலச நினைவு மண்டபத்தில் காமராஜ் மக்கள் இயக்கம் சார்பாக மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

கோவை பேரூர் நொய்யல் நதிக்கரையில் மகாத்மா காந்தி, காமராஜர், லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோரின் அஸ்தி கலசம் வைக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து காமராஜரின் அஸ்தியும், டெல்லியிலிருந்து காந்தி, ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர்களின் அஸ்திகளும் கொண்டு வரப்பட்டு கோவை பேரூர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்நிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பகுதி நீண்ட நாட்களாக பராமரிப்பு இல்லாமல் இருந்த நிலையில்,அண்மையில் நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் ஏற்பாட்டின் பேரில் அவரது சொந்த செலவில் அஸ்தி மண்டபம் புதுப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காமராஜ் மக்கள் இயக்கத்தினர் சார்பாக மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

காமராஜ் மக்கள் இயக்கத்தின் தலைவர் பேரூர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இதில், நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ் பி அன்பரசன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பொன் விஜயராகவன் சின்னராஜ் எம்.என். கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதில்,மகாத்மா காந்தி, காமராஜர் மற்றும் லோக் நாயக் ஜெயபிரகாஷ் ஆகியோரின் அஸ்திக்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட்டது.

இதில் பல்வேறு அமைப்பினர் அஸ்தி கலசம் வைக்கப்பட்டுள்ள இடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மேலும் படிக்க