• Download mobile app
30 Oct 2025, ThursdayEdition - 3550
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காட்டு யானை தாக்கி மன நலம் பாதிக்கப்பட்டவர் பலி – வனத்துறையினர் விசாரணை !

August 2, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள கோத்தகிரி செல்லும் சாலையில் செல்லும் சாலையில் 3 ஆம் வளைவு அருகே இன்று காலை 45 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் சிதைந்த நிலையில் கிடப்பதாக சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிய வந்துள்ளது. சம்பவம் குறித்து அறிந்த வனத்துறையினர வி்ரைந்து வந்து சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

வனத்துறையினரின் விசாரணையில் காட்டு யானையால் தாக்கப்பட்டு சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபரின் உடல் சிதைந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும்,இறந்த நபர் மனநிலை சரியில்லாதவர் என்பதும், தனியாக இரவு நேரத்தில் சாலையில் நடந்து வரும் போது சம்பவம் நடந்துள்ளது என்பதும் வனத்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.இச்சம்பவம் குறித்து சிறுமுகை வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும்,இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க