• Download mobile app
23 May 2019, ThursdayEdition - 1198
FLASH NEWS
  • தருமபுரி தொகுதியில் அன்புமணி பின்னடைவு
  • இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி
  • வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி
  • பிரதமர் மோடிக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து

“காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்தவுடன் பிரதமர் மோடி சிறைக்கு செல்வது உறுதி” – ராகுல் காந்தி

March 13, 2019 தண்டோரா குழு

“காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்தவுடன் பிரதமர் மோடி சிறைக்கு செல்வது உறுதி” என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி பேசியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இக்கூட்டணியில் ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதற்கிடையில், இந்த கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னதாக இன்று காலை சென்னை வந்தார். அதன்பின் பலவாறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் நாகர்கோவிலில் நடைபெற்ற பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,

இங்கே அமைந்திருக்கும் காங்கிரஸ் – திமுக கூட்டணி மக்களுக்கான கூட்டணியாகும். பிரதமர் மோடி தமிழகத்தின் மொழி, கலாச்சாரம், வாழ்வாதாரத்திற்கு எதிரான நிலையை கொண்டுள்ளார். 2019 தேர்தலில் தமிழக மக்களின் உரிமை குரல் ஒலிக்கும். தமிழகத்தில் இன்று நடப்பது மோடி ஆட்டிவைக்கும் கைப்பாவை ஆட்சியாகும் விரைவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக போகிறார். கடந்த காலத்தில் திமுக – அதிமுக போட்டியிருந்தது.இருபக்கமும் வலுவான தலைவர்கள் இருந்தனர். ஆனால், இப்போது மத்திய அரசு தமிழகத்தில் மறைமுகமாக ஆட்சி செய்கிறது. மத்தியில் தமிழகத்தின் கை ஓங்கியிருந்தது. இப்போது மோடியின் கை ஓங்கியுள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிராக அரசின் ஒவ்வொரு நிறுவனங்களையும் சிதைத்து வருகிறார்.

மோடி பொய்யை தவிர வேறு எதையும் சொல்வதில்லை. 2 கோடி வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். இந்தியா இன்று மிகபெரிய வேலைவாய்ப்பு திண்டாத்ததை சந்தித்துக்கொண்டிருக்கிறது. விவசாயிகளின் வேதனை நான் நேரடியாக ஜந்தர் மந்தரில் பார்த்தேன். மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று அறிவித்தோம். அதேபோல் ஆட்சிக்கு வந்தவுடன் நாங்கள் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றினோம். ஆனால் பொய் வாக்குறுதிகளை மட்டுமே கூறி வருகிறார். ஒவ்வொரு மாநிலங்களுக்கும் நெருக்கடியை கொடுத்து ஆட்சியை அடக்க முயற்சி செய்கிறார். மோடி எங்கு என்ன வேண்மென்றாலும் செய்யலாம், தமிழகத்தில் அது நடக்காது. தமிழக மக்கள் அடக்கி ஆழுவதை அங்கீகரிக்கமட்டார்கள்.

தமிழக மக்கள் எப்போது உண்மையின் பக்கம் உள்ளனர். தமிழ் மக்களின் போராட்டம் உண்மை, தர்மம், நியாயத்திற்காக நடக்கும். இந்தியாவில் 45 ஆண்டுகள் இல்லாத வகையில் வேலைவாய்ப்பின்மை உள்ளது. இப்போது ஜம்மு காஷ்மீரும் அம்பானியின் வசம் சென்றுவிட்டது. பிரதமர் மோடியால் நாடு இரண்டாக பிரிந்து காணப்படுகிறாது. ஒரு பக்கம் பணக்கார்கள் சொகுசாக வாழ்கிறார்கள், மறுபக்கம் விவசாயிகள் வருமானமின்றும், இளைஞர்கள் வேலையின்றும் கஷ்டங்களை அனுபவித்து வருகிறார். ரஃபேல் விவகாரத்தில் உங்கள் பணத்தை எடுத்து அனில் அம்பானிக்கு கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் மோடி சிறை செல்வது உறுதி. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்பு திண்டாட்த்தை ஒழிப்போம். ஜிஎஸ்டி வரியை மாற்றி அமைப்போம். ஒரே வரி, எளிமையான வரி, குறைவான வரியை கொண்டுவருவோம். நாட்டில் வாழும் அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானத்திற்கான உறுதி திட்டத்தை அறிமுகப்படுத்துவோம். குறைந்தப்பட்ச வருமானத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு நேரடியாக பணம் வழங்கப்படும். இதன் மூலம் இந்தியாவில் யாரும் வறுமையில் இருக்கமாட்டார்கள். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்வோம். 33% பெண்களுக்கு பாராளுமன்றத்திலும், மத்திய அரசு வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கப்படும்”

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க