• Download mobile app
31 Mar 2023, FridayEdition - 2606
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

கல்வி நிறுவனங்களின் மூலம் கல்வி உதவித் தொகை திட்டங்களில் விண்ணப்பிக்க அழைப்பு

January 28, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளதாவது:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம் (3-8ம் வகுப்பு), ப்ரீமெட்ரிக் திட்டம் (9 மற்றும் 10ம் வகுப்பு) போஸ்ட் மெட்ரிக் திட்டம் (11ம் வகுப்பு முதல் கல்லூரி வரை), உயர்கல்வி சிறப்பு உதவித் தொகைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நடப்பு கல்வி ஆண்டில் கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தும் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் கல்வி உதவித் தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முன்பு ஏ.ஐ.எஸ்.ஹச்.இ. (AISHE) மற்றும் யு.டி.ஐ.எஸ்.இ. (UDISE) சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும், அது பயன்பாட்டில் உள்ளதா? என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

கல்லூரிகளில் நடத்தப்படும் பாடப்பிரிவுகளுக்கு என்.பி.ஏ. (NBA) மற்றும் என்.ஏ.ஏ.சி. இவற்றால் வழங்கப்பட்ட தரச்சான்றுக்கான ஆவணங்கள் பெற வேண்டும். மாணாக்கர்கள் கல்வி நிறுவனங்களின் கல்வி உதவித் தொகை மைய உதவி மூலம் தங்கள் விவரங்களை நேரடியாக இணையதளத்தில் தவறின்றி பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவியராக இருக்க வேண்டும். மாணவியர்களுக்கு பெற்றோர் ஆண்டு வருமானம் உச்சவரம்பு இல்லை.

ப்ரீமெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற மாணவர்களின் சாதிச்சான்று, வருமானச்சான்று, ஆதார், முந்தைய ஆண்டின் வருகைச் சான்று மற்றும் வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கநகல்கள் இணைத்து சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மாணவர்களின் பெயர், கல்வி சான்றிதழ்களில் உள்ளவாறு ஆதார் மற்றும் வங்கிக் கணக்கில் இடம் பெற்றிருக்க வேண்டும். மேலும், மாணவர், பெற்றோரின் கைபேசி எண்கள் செயல்பாட்டில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்கும் மாணவர்கள் தேர்வு எழுதத் தேவையான குறைந்தபட்ச 75 சதவீதம் வருகை சான்று பெற்றிருக்க வேண்டும்.

உயர்கல்வி சிறப்பு உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் பயனடைய அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளின் விடுதிகளில் மாணவர்கள் தங்கி கல்வி பயில வேண்டும். அரசு அனுமதி பெற்ற தனியார் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களாக இருப்பின் சம்மந்தப்பட்ட கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன் விண்ணப்பிக்க வேண்டும். பெற்றோர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில் தாம் பயிலும் கல்வி நிறுவனங்களின் மூலம் தங்களது சரியான விவரங்கள் மற்றும் சான்றுகளுடன் கல்வி உதவித் தொகை திட்டங்களில் விண்ணப்பித்து பயனடையலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க