• Download mobile app
13 May 2021, ThursdayEdition - 1919
FLASH NEWS
  • 16-வது சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு தேர்வு
  • மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி
  • ரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது !
  • நடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு
  • அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு!
  • 2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்
  • சசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் – அமைச்சர் ஜெயக்குமார்
  • “அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா

ஐசிஐசிஐ வங்கியின் நேரடி மனித தொடர்பில்லாத வங்கி தள சேவை அறிமுகம்

May 1, 2021 தண்டோரா குழு

சில்லறை வணிகர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நாட்டின் மிக விரிவான டிஜிட்டல் வங்கி சேவைகளின் தொகுப்பாக மெர்ச்சண்ட் ஸ்டேக் – வணிக அடுக்கு என்று பொருள்படக் கூடிய தளத்தைத் தொடங்கியுள்ளது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி.

இது டிஜிட்டல் வங்கி சேவை மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் வணிகர்களுக்கு வழங்கப்படுகிறது. மளிகை, சூப்பர் மார்க்கெட்டுகள், பெரிய சில்லறை விற்பனைக் கடை சங்கிலிக் கட்டமைப்புகள், ஆன்லைன் வணிகங்கள் மற்றும் பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்கள் போன்றவை தங்கள் வங்கித் தேவைகளை தடையின்றி பூர்த்தி செய்ய இது உதவுகிறது.

இந்த கோவிட் தொற்றுநோய்க் காலத்தின்போது சவாலான நேரங்களில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அந்த நிறுவனங்கள் தடையின்றி சேவை செய்ய முடியும். இந்த முன்முயற்சியானது, ஐசிஐசிஐ வங்கியின் பாதுகாப்பு அக்கறையுடனான வணிகம் என்ற கொள்கையின் வெளிப்பாடாக அமைந்திருப்பதோடு நேரடி மனித தொடர்பில்லாமல் சில்லறை வணிகர்கள் இந்த சேவைகளைப் பெற முடியும் என்பதால் இந்த முன்முயற்சி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அவர்களில் பலர் முதல் முறை தொழில் புரிபவர்களாக உள்ளனர் வங்கியின் கிளைகளுக்குச் செல்லாமல், மக்கள் வீட்டிலேயே இருக்கவும் சமூக இடைவெளியைப் பராமரிக்கவும் அறிவுறுத்தப்படும் இந்த நேரத்தில் இந்த முன்முயற்சி முக்கியத்துவம் பெறுகிறது.

வணிகங்களுக்கான ஐசிஐசிஐ வங்கியின் மொபைல் வங்கிச் செயலியான இன்ஸ்டா பிஸ் – ஸில் இந்த வசதிகளை அவர்கள் உடனடியாகப் பெறலாம்.

சில்லறை விற்பனைச் சூழல் அமைப்பிற்குத் தேவையான அனைத்தையும் ஒரே இடத்தில் பெறும் வகையில் வங்கி தீர்வுகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளின் தொகுப்பை மெர்ச்சண்ட் ஸ்டேக் வழங்குகிறது. இந்த அடுக்கின் முக்கிய தூண்களாக உள்ளவை: 1) சூப்பர் மெர்ச்சண்ட் நடப்புக் கணக்கு என்ற பெயரில் புதிய கணக்கு; 2) மெர்ச்சண்ட் ஓவர் டிராஃப்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் கிரெடிட் எனப்படும் இரண்டு உடனடி கடன் வசதிகள்; இரண்டுமே பிஓஎஸ் பரிவர்த்தனைகளை அடிப்படையாகக் கொண்டவை, மற்றும் தொழில்துறையில் முதல் முறையானவை 3) வணிகர்கள் தங்கள் வணிகத்தை ஆன்லைனில் முன்னெடுத்துச் செல்ல உதவும் டிஜிட்டல் ஸ்டோர் மேனேஜ்மென்ட் வசதி; 4) பிரத்தியேக நம்பிக்கை வெகுமதி திட்டம் இந்த தொழில்துறையில் இது முதல் அம்சம்; 5) ஆன்லைன் இருப்பை விரிவாக்குவதற்கான முக்கிய ஈ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தளங்களுடன் கூட்டு செயல்பாடு போன்ற மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் ஆகியன முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இந்த சேவை அறிமுகம் குறித்து ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் மூத்த நிர்வாகி அனுப் பாக்சி கூறுகையில்,

சுயதொழில் செய்பவர்கள் மற்றும் எம்.எஸ்.எம்.இ எனப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பிரிவு இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது என்பதை நாங்கள் எப்போதும் உறுதியாக நம்புகிறோம். இந்தப் பிரிவின் பெரும்பகுதி சில்லறை வணிகர்களைக் கொண்டுள்ளது. 2020-ம் ஆண்டில் சுமார் 780 பில்லியன் அமெரிக்க டாலர் பரிவர்த்தனைகள் மதிப்புடன் நாட்டில் 2 கோடிக்கு மேற்பட்ட வணிகர்கள் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இவை வரும் ஆண்டுகளில் வேகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது தொற்றுநோய்களின் பரவல் அதிகரித்துவரும் இந்த கடினமான காலங்களில், எங்களது இந்த முயற்சியானது, டிஜிட்டல் வங்கி தளத்துடன் வணிகர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சேவைகளைத் தொடர உதவுவதாக அமையும், இது அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய உதவும். அதனால் நாங்கள் இதற்காகவே மெர்ச்சண்ட் ஸ்டேக் முன்முயற்சியை தொடங்கி இருக்கிறோம்.

மிக முக்கியமாக நேரடி மனித தொடர்பு இல்லாத பல்வேறு வங்கி சேவைகளை இச்சேவை வழங்குகிறது. அதாவது வணிகர்களுக்கு மட்டுமின்றி அவர்களது வாடிக்கையாளர்களுக்கும் மிகவும் அவசியமான பாதுகாப்பை அளிக்கிறது. இந்த சேவையானது பாதுகாப்பு அக்கறையுடனான வணிகம் என்ற ஐசிஐசிஐ வங்கியின் வழிக்காட்டுதல் கொள்கையின் ஒரு பகுதியாக அமைந்திருக்கிறது.

சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரே தளத்தில் அனைத்து டிஜிட்டல் வங்கி சேவைகளையும் வழங்குவதற்காக ஒரு வருடத்திற்கு முன்பு நாங்கள் தொடங்கிய ஐ.சி.ஐ.சி.ஐ ஸ்டேக் என்ற சேவையின் தொடர்ச்சியாக இது அமைந்துள்ளது.

மேலும் படிக்க