• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எஸ் என் எஸ்.இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் பல்வேறு விதமான போட்டிகள்

May 18, 2022 தண்டோரா குழு

கல்லூரி மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோவை டாக்டர் எஸ் என் எஸ்.இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றன.

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள டாக்டர் எஸ்.என்.எஸ் இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கல்லூரிகளுக்கிடையே மிராரி – 22 எனும் தலைப்பில் போட்டிகள் நடைபெற்றன.கல்லூரியின் தாளாளர்
மருத்துவர் எஸ்.இராஜலட்சுமி, தலைவர் முனைவர் எஸ்.என் சுப்பிரமணியன், செயலர் முனைவர் எஸ்.நளின் விமல் குமார், முதன்மை அதிகாரி முனைவர் டேனியல், முதல்வர் முனைவர் அனிதா, துணை முதல்வர் முனைவர் நரேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்த இந்த போட்டியில் நடனம், ஓவியம்,பாட்டு , ஆடை அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த போட்டிகளில் கோவை,திருப்பூர் என 90க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.இதில் உணவு மற்றும் அலங்கார பொருட்கள் கண்காட்சிகளும் நடைபெற்றன. நிறைவாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் படிக்க