• Download mobile app
31 Oct 2025, FridayEdition - 3551
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி செய்யுங்கள் – மாவட்ட ஆட்சியரிடம் டிரைவர்ஸ் அசோசியேஷன் மனு

May 20, 2020 தண்டோரா குழு

கோவையில் அனைத்து வாகன ஓட்டிகள் தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கொரானா நோய் தொற்று காரணமாக நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இச்சூழ்நிலையில் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு டிரைவர்ஸ் அசோசியேஷன் சார்பாக தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உணவின்றி தவித்து வருவதாகவும் தொழில் ஏதும் நடைபெறாமல் வாகனமும் ஓட்டாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கைகளாக தங்களுக்கு உதவி தொகை அல்லது மீண்டும் வாகன இயக்கம் அனுமதிக்கக் கோரி வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். மேலும், தமிழக அரசு தங்களுக்கு கை கொடுத்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க