• Download mobile app
02 Oct 2022, SundayEdition - 2426
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

உக்கடம் பெரிய குளத்தில் “அறுசுவை ஸ்ட்ரீட் ” உணவுத்திருவிழா !

September 22, 2022 தண்டோரா குழு

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் இணைந்து ஏற்கனவே உக்கடம் பெரிய குளத்தில் ” All in All Angadi ” என்னும் பொருட்காட்சியினை சிறப்பான முறையில் நடத்தியது. இது பெரும்பான்மையான மக்களை கவர்ந்துள்ளது.

இதனை தொடர்ந்து இந்த வார இறுதியில் ( 24.09.2022 மற்றும் 25.09.2022 ) காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை உக்கடம் பெரியகுளம் ( I Love Kovai அருகில் ) ” அறுசுவை ஸ்ட்ரீட் ” என்ற உணவுத் திருவிழா நிகழ்ச்சியானது நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பாரம்பரிய மிக்க உணவுகள் மற்றும் பலவகையான உணவுகள் இடம் பெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுகளை சுவைக்கலாம்.மேலும்,இந்த தனித்துவமான உணவுத் திருவிழாவில் பல வகையான உணவுகள் குறிப்பாக பிரியாணி , ஐஸ் கிரீம், ரொட்டி வகைகள் , சாண்ட்விச் , பர்கர், ஐஸ் கோலா போன்ற உணவு வகைகளும் இடம் பெறவுள்ளன. இத்துடன் குழந்தைகளை கவரும் வண்ணம் விளையாட்டு பொருட்களும் இடம்பெறவுள்ளன என மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க