• Download mobile app
08 Dec 2025, MondayEdition - 3589
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உக்கடம் – ஆத்துப்பாலம் சாலையில் போக்குவரத்தில் மீண்டும் மாற்றம்

November 21, 2020 தண்டோரா குழு

கோவை உக்கடம் ஆத்துப்பாலம்
இரண்டாம் கட்ட பணிகள் துவங்க உள்ளதால் மீண்டும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை உக்கடம் ஆத்துப்பாலம் இடையே மேம்பால பணிகள் நடந்துவருகின்றன. பொள்ளாச்சி உடுமலை பழனி கேரளா செல்லும் பஸ்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.மாநகருக்குள் இருந்து குனியமுத்தூர் சுந்தராபுரம் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டு இருந்தன.

இந்தநிலையில் கடந்த மாதம் வாகன ஓட்டிகளின் கோரிக்கையை ஏற்று உக்கடம் ஆத்துப்பாலம் பாலம் பணிகள் நடந்து வரும் பகுதியில் ரோடு அமைக்கப்பட்டு இரு, நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.இப்பாதையில் பொள்ளாச்சி வழியாக பஸ்கள் டவுன் பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு போக்குவரத்து போலீசார் மறுப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஆத்துப்பாலம் பகுதியில் விரைவில் மேம்பால பணிகள் துவங்க உள்ளதால் மீண்டும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு தெரிவித்தார்.

மேலும் படிக்க