• Download mobile app
18 Oct 2021, MondayEdition - 2077
FLASH NEWS
 • வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய தளங்கள் இயங்குவதில் பாதிப்பு
 • பள்ளிகளை திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
 • ரூ.1 லட்சம் அபராதத்தை நிவாரண நிதியாக தர விருப்பமில்லை: நடிகர் விஜய் தரப்பில் விளக்கம்
 • பெகாஸஸ் உளவு மென்பொருளை இந்திய அரசு வாங்கியதா, இல்லையா? – ராகுல் காந்தி
 • தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
 • திருநங்கைகளுக்கு ரூ.1,500 உதவித்தொகை: மத்திய அரசு அறிவிப்பு
 • ரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது !
 • நடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு
 • அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு!
 • 2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்
 • “அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா

இஸ்லாமியர்களை ரவுகளாக மாற்றும் திருமாவளவனை திருநங்கை என்று அழைக்கலாமா – வேலூர் இப்ராஹிம்

October 12, 2021 தண்டோரா குழு

தான் எந்த மதத்தை சார்ந்தவன் என்பதை காட்டாமல் இஸ்லாமியர்களை ரவுகளாக மாற்றும் வி.சி.க தலைவர் திருமாவளவனை திருநங்கை என்று அழைக்கலாமா என்று பா.ஜ.க சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கேள்வியெழுப்பியுள்ளார்.

பெற்றோரை இழந்த இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகளின் கல்வி செலவு மற்றும் அடிப்படை தேவைகள் என அனைத்து செலவுகளையும் கோவை மாவட்ட பா.ஜ.க.அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் கணபதி ஜான்சன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இந்த குழந்தைகளின் முதல் கட்ட தேவைகளுக்கான நிதி உதவி வழங்கும் விழா கோவை மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் பா.ஜ.க சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

நாங்கள் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரான கட்சி என்று திமுக., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆனால், தொடர்ந்து அம்மக்களுக்கு நாங்கள் உதவி வருகிறோம். இதோடு அல்லாமல், இஸ்லாமிய, கிறிஸ்தவ ஏழை மாணவர்கள் கல்லூரி மற்றும் பள்ளிகளில் சேர்வதற்கான தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பா.ஜ.க அனைவருக்குமான கட்சி.கடந்த மாதம் கோவையில் 50 இஸ்லாமியர்கள் பா.ஜ.க.,வில் இணைந்தனர்.இன்றும் பலர் இணைய உள்ளனர்.

மதுபான கடைகள், மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட நெருக்கடி மிகுந்த இடங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், கோவில்களுக்கு கட்டுப்பாடுகள் என்பதை திமுக என்ற இந்து விரோத அரசு செய்கிறது.எங்கள் மாநில தலைவர் 10 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். அதற்குள் கட்டுப்பாடுகளை விளக்கிக் கொள்ளாவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம். எங்கு சென்றாலும் வி.சி.க தொண்டர்கள் எனக்கு எதிராக போராடி வன்முறையை தூண்டுகின்றனர். வி.சி.க தலைவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதை அக்கட்சியில் உள்ளவர்கள் சேர்ந்து கொள்ள வேண்டும்.தான் எந்த மதத்தை சார்ந்தவன் என்பதை காட்டாமல் இஸ்லாமியர்களை ரவுகளாக மாற்றும் வி.சி.க தலைவர் திருமாவளவனை திருநங்கை என்று அழைக்கலாமா என்று

திருமாவளவனை திருநங்கை என்பதா, ஆண் என்பதா? பெண் என்பதா? என்று தெரியவில்லை. இஸ்லாமியர்களையும், கிறிஸ்தாவர்களையும் காக்க வந்தவர் போல் வந்து, ரவுடிகளாக மாற்ற முயற்சி செய்கிறார். கிறிஸ்தவ சமூகத்தை வன்முறை சமூகமாக மாற்ற திருமா நாடகமாடுகிறார். வெளி மாநிலங்களில் இருந்து பருப்பு உட்பட பல பொருட்கள் தமிழகத்திற்கு வருகின்றன. பிறகு எப்படி ‘மேட் இன் தமிழ்நாடு’ செல்லுபடியாகும்? இது பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் உள்ளது.

தி.மு.க ஆட்சி நடைபெறும் போது காவல் துறையை கையில் வைத்துக் கொண்டு உள்ளாட்சி இடைத்தேர்தலை நடத்தி முடித்துள்ளது. அதன் முடிவுகளே தற்போது வெளியாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க.தலைவர் நந்தகுமார்,பொதுச்செயலாளர் ரமேஷ் உட்பட கட்சியினர் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க