• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இரத்தினம் கலை & அறிவியல் கல்லூரி மாணவர்கள் வானொலியில் திருக்குறள் வாசித்து உலக சாதனை!!

February 8, 2024 தண்டோரா குழு

இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,இரத்தினவாணி சமுதாய வானொலி 90.8 மற்றும் தமிழ்த் துறை & காட்சி தொடர்பியல் துறை
இணைந்து உலக சாதனை நிகழ்ச்சி நடத்தியது.

உலகப் புனித நூலாக திருக்குறளை ஐநா சபை அறிவிக்க வேண்டியும்,உலக சாதனைக்காகவும் திருக்குறளில் உள்ள 1330 குறள்களையும் இடைவேளையின்றி ஒரே நேரத்தில் 170 பேர் இரத்தினவாணி சமுதாய வானொலியில் நேரலையில் வாசித்து சாதனை படைத்தனர்.

இந்த சாதனை படைத்த சாதனையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பேராசிரியர்கள்,உதவிப் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந் நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலாளர் முனைவர் மாணிக்கம், கல்லூரி முதல்வர் முனைவர் S.பாலசுப்பிரமணியம்,முனைவர் KVP சபரிஷ் ஆய்வுத்துறை புலமுதன்மையர்,முனைவர் S N சுரேஷ் கல்லூரி துணை முதல்வர் உட்பட, சிறப்பு விருந்தினர் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் உலக சாதனையாளர் செ. வெங்கடேசன் கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கினார்.

இந்நிகழ்வை காட்சி தொடர்பியல் துறை தலைவர் சதீஷ் ஆனந்தன், இரத்தினவாணி சமுதாய வானொலி நிலை இயக்குனர் முனைவர் ஜெ.மகேந்திரன், தமிழ் துறைத் தலைவர் முனைவர் ந. பரமேஸ்வரி மற்றும் இரத்தினம் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.இதில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

மேலும் படிக்க