எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் இந்திய விடுதலைக்கு போராடியிருந்தாலும், பகத் சிங்கின் இடம் அலாதியானது. நாட்டுக்காக தன் உயிரை துச்சமென கருதி உயிர் தியாகம் செய்த மாவீரன் பகத் சிங் லாகூர் சிறைசாலையில் தூக்கிலடப்பட்ட தினம் மார்ச் 23 தான்.
லாகூர் நீதிமன்றம் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சதி வழக்கில், பகத்சிங் மற்றும் அவரது போராளி தோழர்கள் ராஜகுரு மற்றும் சுக்தேவ் ஆகியோருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. தூக்கு தண்டனைக்கு முந்தய நாளிலும் தான் படிப்பதையும், எழுதுவதையும் கை விடாத பகத் சிங் இன்றும் நாட்டில் உள்ள எண்ணற்ற இளைஞர்களுக்கு ரோல் மாடலாக விளங்குகிறார் என்பதில் ஐயமில்லை.
1907-ஆம் ஆண்டு, அக்டோபர் 7-இல் ஒருங்கிணைந்த பஞ்சாப் மாநிலம், பங்கர் கிராமத்தில், கிஷன் சிங் மற்றும் வித்யாவதி தம்பதியருக்கு மகனாக பிறந்த பகத்சிங், இளம் வயதிலேயே இந்திய விடுதலை வேட்கை மற்றும் பொதுவுடமை கருத்துகளில் தீவிரமாக இருந்தார். அவரது இளம் வயதில் நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலை சம்பவம் அவரது மனதை பெரிதும் பாதித்து, பிற்காலத்தில் பகத்சிங்கை ஒரு விடுதலை போராட்ட வீரனாக மாற்றியது.
‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ என்ற சுயசரிதையை எழுதிய பகத்சிங்கின் வாழ்கை வரலாறையொட்டி பல இந்திய திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஷாகீத், ஷாகீத்-இ-அசாம், 23 மார்ச் 1931: ஷாகீத், தி லெஜண்ட் ஆப் பகத்சிங் மற்றும் ரன் தி பசந்தி போன்ற எண்ணற்ற திரைப்படங்களும், ஏராளமான புத்தகங்களும் பகத்சிங்கின் பெருமையையும், தியாகத்தையும் இளம் தலைமுறையினருக்கு எடுத்து செல்கிறது.
அச்சமறியாத பகத்சிங் தான் தூக்கு மேடைக்கு செல்லும் போதும், புன்னகையுடனும், ஆவேசத்துடனும் காணப்பட்டார். நாட்டுக்காக உயிர் துறக்கிறோம் என்ற பெருமை அவரது முகத்தில் தாண்டவமாடியது. நாட்டிற்காக என்ன தியாகம் செய்தாலும் தகும், அதற்காக தான் இன்னுயிர் உள்ளது என்ற தாரக மந்திரத்துடன் வாழ்ந்த பகத்சிங் இன்றும் எண்ணற்ற இளைஞர்களுக்கு உதாரணமாக திகழ்கிறார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு