• Download mobile app
16 Jul 2019, TuesdayEdition - 1252
FLASH NEWS
  • “நியூசிலாந்து போல திமுக தோற்கும்!” – அமைச்சர் ஜெயக்குமார்
  • தொழில் நுட்பக் கோளாறு.. கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2’…!
  • பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக டெல்லியில் 14 பேர் கைது

இந்துகள் சுயமரியாதையோட வாழ வேண்டும் என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் – கரு.பழனியப்பன்

April 11, 2019 தண்டோரா குழு

இந்துகள் சுயமரியாதையோட வாழ வேண்டும் என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் பேசியுள்ளார்.

மத்திய அரசின் நாட்கள் எண்ணப்படுவதால் புதிதாக 341 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு விரைவில் அனுமதி கொடுத்து விடுவார்கள் எனவும் அப்படி அனுமதி கொடுத்தாலும் அதை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபடுவோம் என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு ஆதரவாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அப்போது பேசிய கரு.பழனியப்பன்,

பா.ஜ.க தொடர்ந்து பொய்கள் மூலமாகவே ஆட்சியை பிடித்தது. பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை சமீபத்தில் வெளியானது அதை நக்கலடித்து சிலர் மீம்ஸ் போட்டார்கள். நக்கலுக்கு போட்டது என்று தெரியாமல் அதற்கும் பா.ஜ.கவினர் வக்காலத்து வாங்குகின்றனர்.

பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அந்த பொய்யினாலேயே வீழ போகின்றது.அதிமுகவும் சரி, பா.ஜ.கவும் சரி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பற்றி எங்குமே சொல்வதே இல்லை. இப்போது பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜி.எஸ்.டி வரியை குறைப்பேன் என்கின்றார். 5 வருசமா எதுவும் செய்யாமல் இப்போது செய்துவிடுவதாக சி.பி.ராதாகிருஷ்ணன் சொல்கிறார்.

இந்துகள் சுயமரியாதையோட வாழ வேண்டும் என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். சங்கராச்சாரிக்கு இணையாக சுப்பிரமணிசாமியால் உட்கார முடியும். பொன்.ராதாகிருஷ்ணனால் உட்கார முடியாது.தமிழிசை சௌந்தராஜன் ஒரு போதும் நிர்மலா சீத்தாராமன் ஆக முடியாது. எந்த கூட்டத்திற்கு வந்தாலும் காவி சட்டையுடன் செல்லும் சி.பி.ராதாகிருஷ்ணன் இப்போது வெள்ளை சட்டை அணிந்து வந்து வாக்கு கேட்குகின்றார். ஜெயித்து வந்தால் உங்களுக்கு காவி சட்டையை போட்டுவிடுவார்.

சிபிஎம் வேட்பாளர் கணவனும் மனைவியும் பொது பிரிச்சினைக்காக போராடுபவர்கள். பல கோடி மதிப்பிற்கு டிரஸ் போட்ட மோடி இப்பொது வாட்ச் மேன் டிரஸ்ஸை போட்டுக்கொண்டு ஏமாற்றுகின்றார்.

தேர்தலில் go back modi சொல்வதுதான் முக்கியம்.ஜக்கி வாசுதேவ் ஆக்கிரமிப்பை விசாரிப்போம் என்று சொன்ன ஒரே வேட்பாளர் சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் மட்டுமே.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனைதொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ,

தேர்தல் ஆணையம் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைதேர்தல் அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் சென்ற பின்னர் இப்போது தேர்தல் நடத்த உத்திரவிடப்பட்டு இருக்கிறார்கள்.இது திமுக அணிக்கு கிடைத்த வெற்றி.ஓரே நேரத்தில் இடைதேர்தல் வைக்க கோரிக்கை விடுத்த போதே, தேர்தல் அறிவித்து இருந்தால் 500 கோடி மிச்சமாகி இருக்கும்இது நிர்வாக சீர்கேட்டை காட்டுகின்றது.ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்க மோடி அரசு குறியாக இருக்கின்றது. புதிதாக 341 கிணறுகள் அமைத்து ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்க வேதாந்த, ஒ.என்.ஜி.சி நிறுவனங்கள் மத்திய சுற்று சுழல் துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளன. இதற்கும் உடனடியாக அனுமதி கொடுத்துவிடுவார்கள்.

மத்திய அரசின் நாட்கள் எண்ணப்படுவதால் இதற்கு அனுமதி சீக்கிரம் கொடுத்து விடுவார்கள். இதனால் இயற்கை வளம் அழிந்து போகும். காவிரி பசுமை மண்டலமே அழிந்து் போகும்.லட்சக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இயற்கை வளங்கள் தாரை வார்க்கப்படுகின்றன,இதை ஏற்றுக்கொள்ள முடியாது. புதிய கிணறுகளுக்கு அனுமதி கொடுத்தாலும் அதை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபடுவோம். இதை அவர்கள் ஏற்கனவே இருக்கும் செயல்பாடுகளின் தொடர்ச்சி என்று கூறுவார்கள். சட்டத்தை மீற அவர்களுக்கு அவர்களுக்கு தேர்தல் ஆணையம் உடந்தையாக இருக்கின்றது என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் படிக்க