• Download mobile app
07 Feb 2023, TuesdayEdition - 2554
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

இந்திய எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ‘எலெக்ராமா 2023’ கண்காட்சி

January 20, 2023 தண்டோரா குழு

இந்திய மின் சாதன உற்பத்தித் துறையின் முன்னணி அமைப்பாக திகழும் இந்திய எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கம் நடத்த இருக்கும் ‘எலெக்ராமா’ 15வது கண்காட்சி தொடர்பாக தமிழ்நாடு மின்சாரத் துறையின் மூத்த அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியை கோவையில் உள்ள ஐடிசி நிறுவனத்தின் வெல்கம் ஓட்டலில் இன்று நடத்தியது.

மின்சாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய மின்னணுவியல் துறையின் பிரமாண்ட கண்காட்சியான எலெக்ராமா 2023 வரும் பிப்ரவரி மாதம் 18–ந்தேதி முதல் 22–ந்தேதி வரை 5 நாட்கள் கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கம் செய்து வருகிறது.இந்த அமைப்பும் மற்றும் அதன் உறுப்பினர்களும் இந்தியாவை மின்மயமாக்குதல்,டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் பசுமை மயமாக்குதல் என்னும் 100 ஆண்டு கூட்டாண்மை இலக்கை அடைய மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

“நிலையான எதிர்காலத்திற்காக ஆற்றலை மறுபரிசீலனை செய்யுங்கள்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த கண்காட்சி நடைபெறுகிறது.இதில் மின்சாரம் சார்ந்த புதுமை கண்டுபிடிப்புகள், ஆற்றல் சேமிப்பு,பசுமை ஹைட்ரஜன்,எரிபொருள் கலம், செயற்கை நுண்ணறிவு,இன்டர்நெட் ஆப் திங் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல்வேறு விஷயங்கள் இடம்பெற உள்ளன.இந்த கண்காட்சியின் முக்கிய நோக்கம் ஆற்றல் பாதுகாப்பு,பூஜ்ய கார்பன் வெளியேற்றம் மற்றும் திறமையான மின் நுகர்வு ஆகியவற்றின் மூலம் நிலைத்தன்மையை மையமாகக் கொண்டிருக்கும்.

இது குறித்து இந்திய எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (ஐஇஇஎம்ஏ) தலைவர் ரோகித் பதக் கூறுகையில்,

இம்முறை நடைபெறும் எலெக்ராமா கண்காட்சி புதிய ஆற்றல் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் அதே வேளையில்,எங்கள் சங்கம் சார்பில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான சவாலையும் அறிமுகப்படுத்தி உள்ளோம்.இதன் மூலம் நடைபெறவிருக்கும் கண்காட்சியில் தங்கள் புதிய கண்டுபிடிப்புகளை ஸ்டார்ட்–அப் நிறுவனங்கள் வெளிப்படுத்தும் ஒரு சிறந்த தளமாக இது அமையும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,இந்த சவாலில் 10 முதல் 12 இடங்களை பிடிக்கும் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். அவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் தங்களுக்கு பயன்படும் எனில் அவர்களை தங்கள் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் கூட்டாக இணைத்து அவர்கள் செயல்படலாம்.மேலும் அது நிலையான எதிர்காலத்திற்கு சிறந்த ஒன்றாக அமையும் என்று தெரிவித்தார்.

இது குறித்து ஐஇஇஎம்ஏ தென் மண்டல தலைவர் ஆர்.பிரகாஷ் கூறுகையில்,

இந்தியாவில் பிற மாநிலங்களைக் காட்டிலும் தொழில் துறையில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. மேலும் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்த தொழில் வளர்ச்சியைத் தக்கவைக்கும் வகையில், தற்போது செயல்படுத்தப்படும் மின் திட்டங்களில் எரிசக்தி பாதுகாப்பைக் கொண்டுவருவதற்கு அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை மின் ஆற்றல் பரிமாற்றம் மற்றும் வினியோக துறைகளில் 60க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எங்கள் சங்கத்தில் உள்ளனர். முக்கியமாக பவர் எலக்ட்ரானிக்ஸ்,ஸ்விட்ச்கியர், டிரான்ஸ்பார்மர்கள், கேபிள்கள், பெரிய இபிசிகளுக்கு கூடுதலாக லிப்ட் போன்றவற்றை இந்நிறுவனங்கள் தயாரித்து வழங்கி வருகின்றன.

இந்த கண்காட்சி மூலம் மின்சாரம் மற்றும் அது சார்ந்த பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவின் பலத்தை வெளிப்படுத்துவதை நாங்கள் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம். இதில் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமான வர்த்தக விவரங்கள் சார்ந்த பரிவர்த்தனை இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

‘எலெக்ராமா 2023’ கண்காட்சி தலைவர் ஜிதேந்திர அகர்வால் கூறுகையில்,

15வது முறையாக நடைபெறும் இந்த கண்காட்சி பல்வேறு துறைகளில் புதுமை மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்களை வெளிப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தும்.தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் முதல் உலகம் முழுவதும் இருந்து இந்த பொருட்களை வாங்குவதற்கு 700க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.

தொழில்துறையின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்காக, சில குறிப்பிட்ட பகுதிகள் வரம்பற்ற வணிக வாய்ப்புகளை வழங்குகின்றன, இதில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் புதிய தொழில் நிறுவனங்கள், அதாவது ரயில்வே, மெட்ரோ, விமான நிலையம், பாதுகாப்பு, ஸ்மார்ட் நகரங்கள், கட்டிடங்கள், பசுமை ஹைட்ரஜன் மற்றும் மின்சார வாகனங்கள் உள்ளிட்டவற்றில் பெரிய அளவில் முதலீடுகளை செய்து வருகின்றன. மையப் பரிமாற்றம் மற்றும் வினியோகப் பிரிவுகள் தவிர மற்றவை இந்த கண்காட்சியில் இடம்பெறும் என்று தெரிவித்தார்.

ஐஇஇஎம்ஏ தென் மண்டல துணைத் தலைவர் சுதிர் கோகலே, மாநில ஒருங்கிணைப்பாளர் அருணா ஜனார்த்தனன் ஆகியோர் நமது தொழில்துறைக்கான வாய்ப்புகள் குறித்தும், உலகளாவிய வினியோகச் சங்கிலி குறித்தும், புதிய ஆற்றல் மற்றும் பூஜ்ய கார்பன் வெளியேற்றத்தின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார்கள்.

மேலும் படிக்க