• Download mobile app
01 Dec 2024, SundayEdition - 3217
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆயுதப்படை காவலர்களுக்கான வருடாந்திர கவாத்து மற்றும் மாவட்ட ஆயுத படையை ஆய்வு மேற்கொண்ட மேற்கு மண்டல காவல்துறை தலைவர்

November 24, 2024 தண்டோரா குழு

மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார்,கோவை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கான கவாத்து, அரசால் வழங்கப்பட்டுள்ள அரசு வாகனங்கள் மற்றும் உடைபொருள்களுக்கான ஆய்வினை இன்று மேற்கொண்டார்.

இதில் பெண் மற்றும் ஆண் காவலர்கள் அலங்கார அணிவகுப்பில் பங்கேற்று தங்களது உடல் வலிமையையும் மன உறுதியையும் வெளிப்படுத்தினர். அதனை தொடர்ந்து சட்ட விரோத கூட்டத்தை கலைக்கும் கவாத்து(Mob operation) உட்பட பல்வேறு கவாத்துகளும் நடைபெற்றது. மேலும், இவ்வாய்வின் போது கவாத்து, உடைப்பொருள்கள் மற்றும் அரசு வாகனங்களை சிறந்த முறையில் பராமரித்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.

மேலும் ஆயுதப்படை காவலர்களுக்கு சட்ட ஒழுங்கு மற்றும் கைதி வழிக்காவல், முக்கிய பிரமுகர் வருகை போன்ற இதர பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார். காவலர்களுக்கான குறைகளையும் கேட்டறிந்தார். இவ்வாய்வில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன் உடனிருந்தார்.

மேலும் படிக்க