அலையன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் ஹில் சிட்டி சார்பாக இன்று காலை கோவைப்புதூரில் அமைந்துள்ள பெருமாள் கோவிலில் மடப்பள்ளி (சமையல் அறை) திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது.
அலையன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் ஹில் சிட்டி சார்பாக 5வது நிரந்தர சேவை திட்டமாக
பெருமாள் கோவிலில் மடப்பள்ளி (சமையல் அறை) திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது. இதன் மதிப்பீடு சுமார் ரூபாய் 8 லட்சம் ஆகும். இதனை அலையன்ஸ் கிளப் கோவை மாவட்ட ஆளுநர் அலையன்ஸ் சீனிவாசன் அவர்கள் துவக்கி வைத்தார்.
கோவை மாவட்டம் அலையன்ஸ் கிளப் முதல் துணை ஆளுநர் அலையன்ஸ் டாக்டர் ஶ்ரீநிவாசகிரி மற்றும் அலையன்ஸ் பிரியா கிரி அவர்கள் இதற்கான நன்கொடை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில்,மாவட்ட அமைச்சரவை இரண்டாம் துனை ஆளுநர் அலையன்ஸ் ராஜன் மற்றும் செயலாளர் ரமேஷ்,ஹில் சிட்டி சங்கத் தலைவர்சதீஷ்,செயலாளர் சரவணராஜா, மாவட்ட தலைவர் பிரபாகரன் அலையன்ஸ் நிதிஷ் குட்டன், அலையன்ஸ் ஜெயகிருஷ்ணன், அலையன்ஸ் ஆனந்த சிவகுமார், அலையன்ஸ் துரைச்சந்திரன், அலையன்ஸ் கோபாலகிருஷ்ணன்,மற்றும் சங்கர செல்வராஜ், அலையன்ஸ் வள்ளியம்மாள் மற்றும் திருவேங்கடவன் சேரிட்டபிள் சொசைட்டி தலைவர் நரசிம்மன் செயலாளர் ரங்கராஜன் கலந்து கொண்டனர். ஒப்பிலி ஐயங்கார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து மாபெரும் மருத்துவ முகாம் திருவேங்கடவன் சாரிடபிள் சொசைட்டி& ராமகிருஷ்ணா மருத்துவமனை உடன் இணைந்து நடைபெற்றது.இந்த மருத்துவ முகாமில் சுமார் 2 லட்சம் மதிப்புடைய அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக பொதுமக்களுக்கு செய்யப்பட்டது. இதனை அலையன்ஸ் மாவட்ட ஆளுநர் அலை சீனிவாசன் அவர்கள் துவக்கி வைத்தார்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்