- தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
- தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
- மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
- மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
கோவையை தலைமை இடமாக கொண்டு ஷாலோம் டிரஸ்ட் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது.இந்த டிரஸ்டின் கல்வி ஆலோசகர் அனிதா காமராஜ் 13 வருடங்களாக 10 – க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் மாணவர்கள் மருத்துவம் படிக்கும் சரியான வழிகாட்டுதலுடன் செய்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே புதிய நீட் நுழைவு தேர்வு முறையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைப்பதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. அதனை போக்க அரசு 7.5 சதவீத இடஒதுக்கீடு மற்றும் வாய்ப்பை நீட் விலக்கு மசோதா என பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில், நாட்டிற்கு ஏராளமான மருத்துவர்களை உருவாக்கி வேண்டும் என்ற நோக்கத்தில் ஷாலோம் டிரஸ்ட் மருத்துவம் பயில செல்லும் மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை , இலவச மடிக்கணினி , புத்தகங்கள் , ஸ்டெதஸ்கோப் வழங்கி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இந்த கல்வி ஆண்டில் அரசு பள்ளியில் படித்து 12 – ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று,மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காத மருத்துவராகும் கனவோடு உள்ள மாணவ,மாணவிகளுக்கு வெளிநாடுகளில் சென்று தர படிக்கும் சிறப்பான வாய்ப்பை இலவசமாக வழங்க உள்ளது.
இதற்கான அட்மிஷன்,விசா,டாக்குமெண்டேஷன் என ரூ.3 லட்சம் செல வாகும் அனைத்து தொகையையும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இலவசமாக ஷாலோம் டிரஸ்ட் செய்து தர முடிவு செய்துள்ளது. மேலும் வெளிநாட்டு மருத்துவ கல்லூரியிலும் குறைவான மிகவும் கட்டணத்தில் மருத்துவ கல்வி பயிலவும் ஏற்பாடு செய்து அதனையும் இரு தவணைகளாக செலுத்தவும் உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளது.
ஷாலோம் டிரஸ்டின் இந்த சிறப்பான வாய்ப்பை பயன்படுத்தி அரசு பள்ளி மாணவ , மாணவிகளும் தங்களின் மருத்துவராகும் கனவை நிறைவேற்றி சமூகத்திற்கும் சிறப்பான சேவையாற்றுமாறு ஷாலோம் டிரஸ்ட் தெரிவித்துள்ளது.
நிபந்தனைகள்
1 .மருத்துவர் ஆக வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டும்
2. கண்டிப்பாக அரசு பள்ளியில் 12 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் அவசியம்
3.12 – ம் வகுப்பு பொது தேர்வில் , இயற்பியல் , வேதியியல் , உயிரியல் பாடங்களில் குறைந்தது 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
4.நீட் தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது . ( 2021 – ம் ஆண்டில் தகுதி மதிப்பெண்ணானது BC / MBC / SC / ST மாணவர்களுக்கு 720 க்கு வெறும் 108 மட்டுமே )
5.தமிழநாடு மற்றும் கேரளாவை சார்ந்த மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்
6.ஷாலோம் ட்ரஸ்ட் மற்றும் கல்வி அறகட்டளையின் முடிவே இறுதியானது.
மேலும் தகவலுக்கு : 1800 425 8890
செல் : 94980,88890
கோவையில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பில் புதிய ரத்த வங்கிதிறப்பு
கிரஷர் சங்கம் மற்றும் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் 9 லட்சம் ரூபாய்க்கு வெள்ள நிவாரண உதவி
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ உதவி வழங்கிய சிவராம் நகர் குடியிருப்போர் சங்கம்
250 நோயாளிகளுக்கு 33000 டயாலிசிஸ் செய்ய உதவிய ஆர்சில் நிறுவனம்
கோவை கல்லூரி மாணவிகள் ஒரு மில்லியன் விதை பந்துகளை தயாரித்து சாதனை
கோவையில் சின்மயா மிஷன் சார்பில் டிசம்பர் 10 முதல் ஹனுமான் சாலிசா குறித்த சொற்பொழிவு