• Download mobile app
16 Jun 2021, WednesdayEdition - 1953
FLASH NEWS
 • தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
 • அண்ணா பல்கலை.யில் ஜூன் 14 முதல் ஆன்லைன் தேர்வுகள்: அமைச்சர் பொன்முடி பேட்டி
 • தமிழகத்தில் நாள்தோறும் 2 லட்சம் லிட்டர் பால் அதிகமாகக் கொள்முதல்: அமைச்சர் நாசர்
 • திருநங்கைகளுக்கு ரூ.1,500 உதவித்தொகை: மத்திய அரசு அறிவிப்பு
 • 16-வது சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு தேர்வு
 • மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி
 • ரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது !
 • நடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு
 • அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு!
 • 2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்
 • சசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் – அமைச்சர் ஜெயக்குமார்
 • “அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா

அரசின் விதிகளை மீறும் தனியார் மருத்துவமனைகளை அரசு கையகப்படுத்த வேண்டும்- கோவை .எம்பி

May 13, 2021 தண்டோரா குழு

கோவை ஆவரம்பாளைம் கோ-இந்தியா தொழில்துறை சங்கத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கொரோனா இரண்டாவது அலை அதிகளவில் பரவி வரும் நிலையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பங்கேற்றனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்நடராஜன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில்,

இங்கே பேசிய சிலர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதால் படுக்கைகளின் எண்ணிக்கையை குறைப்பதாக பேசினார்கள். இதனை ஒருபோதும் ஏற்க முடியாது. இதற்கான எந்த உரிமையும் இவர்களுக்கு கிடையாது. தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிற நிலையில் படுக்கையின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது குறித்துத்தான் இப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். அப்படி அரசின் விதிகளுக்கு மாறாக படுக்கைகளின் எண்ணிக்கையை குறைத்தாலோ, அரசின் விதிகளுக்கு மாறகா செயல்பட்டாலோ அந்த தனியார் மருத்துவமனையை அரசே முழுமையாக கையகப்படுத்த வேண்டும்.

அதற்கான நடவடிக்கையை மாவட்ட ஆட்சித்தலைவர் மேற்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவதற்கு அரசின் தரப்பில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதேபோல நமது தகுதியும் திறமையும் வாய்ந்த கோவை தொழில்முனைவோர்கள் வணிக ஆக்சிஜனை மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்சிஜனாக மாற்றி உற்பத்தி செய்து மருத்துவமனைகளுக்கு வழங்கும் பணியை தொழில்துறையினர் முனைபோடு செயல்படுத்த வேண்டுகிறேன். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக நடைமுறை படுத்தப்படவில்லை.

காவல்துறையினர் சிறிது கெடுபிடி காட்டி ஊரடங்கை வெற்கரமாக்கிட வேண்டும். இவையனைத்தும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவும். அதேபோன்று திருப்பூரில் தொழில்முனைவோர்கள் வெளிநாட்டு ஆர்டர்கள் இருந்தாலும் பரவாயில்லை நாங்கள் முழுமையான ஊரடங்கை கடைபிடிக்க இருக்கிறோம் என அறிவித்துள்ளார்கள். இதனை கோவை தொழில்முனைவோர்கள் பரிசீலனை செய்ய வேண்டுகிறேன். தனியார் மருத்துவமனைகள் அவசியமற்ற மருந்துகளை பரிந்துரைப்பதை கைவிட வேண்டும். இதன்காரணமாக செயற்கையாக தட்டுப்பாடு மற்றும் பதட்டத்தை ஏற்படுத்துகிறது. இதனை உயர் மருத்துவர்கள் கண்காணிக்க வேண்டும். தமிழகத்திற்கு தேவையான அளவிற்கு தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும். அதற்கான நிர்பந்தத்தை அனைவரும் ஒன்றினைந்து குரல் எழுப்ப வேண்டும்.

முதலமைச்சர் நிவராண நிதிக்கு கோவையில் உள்ள தொழில்முனைவோர்கள் தாரளமான நிதியை அளிக்க வேண்டும். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்றில்லாமல் ஒன்றுபட்டு கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்போம் என முதலமைச்சர் அறிவித்த அடுத்த நாளே நமது மாவட்டத்தில் அனைவரும் ஒன்றினைந்து இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளோம். இத்தகைய ஒற்றுமையோடு நமது மக்களை பாதுகாக்க போரிடுவோம் என்றார்.

ஆலோசனை கூட்டத்தின் நிறைவாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை கூட்டத்தில் பேசுகையில், கொரோனா இரண்டாவது அலை மிக கொடூரமாக உள்ளது. ஊரடங்கு அறிவிப்பு என்பது அனைத்து தரப்பின் கருத்துகளை கேட்டு தான் முதலமைச்சர் அறிவித்தார். தமிழகத்திற்கு மத்திய அரசிடம் இருந்து 219 கேல் ஆக்சிசன் கிடைத்ததிலிருந்து, தற்போது 419 கேல் ஆக்சிசன் அதிகரித்து வாங்கியுள்ளார் முதலமைச்சர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் தயாரகும் ஆக்சிசன் கோவை மாவட்டத்திற்கு வரவுள்ளது. பின்னார் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டமான கோவையை ஆய்வு செய்வதற்கு சுகாதரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் வருகை தருகின்றனர். கோவைக்கு உடனடியாக ஆக்சிஜன் தேவை என்பதும் கூடுதலாக படுக்கை உண்டாக்க வேண்டும் என்பதும் முக்கியம். ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர் கட்சியாக இருந்தாலும் சரி தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஒன்றுபட்டு பணி செய்வோம் என்றார்.

மேலும் படிக்க