• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு மற்றும் அசோலா வளர்ப்பு குறித்து செயல்முறை விளக்கம்

February 16, 2024 தண்டோரா குழு

கிணத்துக்கடவு,அரசம்பாளையத்தில் உள்ள அமிர்தா வேளாண்மை கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் தங்கள் ஊரக வேளாண்மை செயல்முறை பயிற்சி அனுபவத் திட்டத்தின் ( RAWE ) கீழ் வேளாண்மையில் தொழில்நுட்ப செயல்முறை பயிற்சி அளித்தனர்.

குருநல்லிபாளையத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தின் அருகில் நடந்த நிகழ்வில் , கல்லூரி முதல்வர் முனைவர் சுதீஷ் மணலில்,RAWE ஒருங்கிணைப்பாளர் முனைவர்.சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர் அமிர்தா வேளாண்மை கல்லூரி மாணவ மாணவிகள் பார்வதி எஸ், ஐஃபா அம்ரின், தேவநந்தனா பினுராஜ் , கிருஷ்ணா, நட்சத்திரா, ஜெயஸ்ரீ, வரதா அருண், அபிஜித் ராபி, ஆதிரா ராஜன் , ஆயிஷா ஷபானா, ஸ்ரீகாந்த், நேஹா மாதவன், அக்ஷத் கே அணில், தீட்சண்யா பி , சோனா சரஸ்வதி ஆகியோரால் பயிற்சி அளிக்கப்பட்டது.

மாணவர்கள் அசோலா வளர்ப்பு மற்றும் தேனீ வளர்ப்பு பற்றி விரிவாக விளக்க உரையை வழங்கினர்.அசோலா உற்பத்தி செய்வது எவ்வாறு என்பது செயல்முறையாக காண்பித்து, அசோலாவை பயிரிட்டனர். மேலும்,அசோலா வளர்ப்பின் போது பின்பற்ற வேண்டிய விதி முறைகள் , அதன் பராமரிப்பு முறைகள், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாக விளக்கம் அளித்தனர்.

இதனை கோழிகளுக்கு உணவாகத் தரும் போது அதன் எடை அதிகரிக்கும் என்பதையும் , பசுமாடுகளுக்கு உணவாக தரும் போது பால் உற்பத்தி அதிகரிக்கும் என்பதையும் எடுத்துரைத்தனர் . அதைத் தொடர்ந்து தேனீ வளர்ப்பு பற்றி விளக்கம் அளித்தனர் . அதன் முக்கியத்துவம் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி விளக்கம் அளித்தனர்.

தேனை உணவாக , மருந்தாக மற்றும் அழகு சாதனப் பொருட்களாக பயன்படுத்தலாம் . தேனீ வளர்ப்பின் போது தேவைப்படும் பொருட்களை காண்பித்து அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று கூறினர் . இப்பயிற்சின் போது விவசாயிகள் தங்கள் அனுபவத்தை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

மேலும் படிக்க