• Download mobile app
15 Aug 2020, SaturdayEdition - 1648
FLASH NEWS
 • தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5000ஐ கடந்தது
 • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது!
 • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.51 லட்சத்தை கடந்தது!
 • சென்னையில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!
 • மலேசிய முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..!
 • தனியார் பள்ளிகள் 40% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம்
 • 6 லட்சத்தைத் தாண்டியது குணமடைந்தோர் எண்ணிக்கை: மத்திய அரசு
 • மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி
 • கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி
 • கொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
 • தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது
 • ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி
 • இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை
 • கடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா !
 • இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு
 • பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்!
 • ஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு
 • தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு!
 • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

அன்று எதிரெதிர் துருவங்கள் இன்று நண்பர்கள் – இருவரும் இணைந்த சுவாரஸ்யம்

September 9, 2019 தண்டோரா குழு

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின் 2002-ம் ஆண்டு குஜராத் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது.இந்த கலவரத்தின் கோரத்தை இந்தியா முழுவதிலும் வெளிப்படுத்தியது 2 புகைப்படங்கள் தான். அதில் ஒன்று உயிர்ப் பிச்சை கேட்டு இளைஞர் ஒருவர் கெஞ்சுவது போன்ற படம். இந்த புகைப்படம் பார்ப்பவர்களை உருகவைத்தது.அந்தப் புகைப்படத்தில் இருந்த இளைஞரின் பெயர் குத்புதின் அன்சாரி. மற்றொரு புகைப்படத்தில் கையில் வாளுடன் ஆவேசமாக நிற்கும் நபர். அவரது பெயர் அஷோக் பார்மர் என்கிற மோச்சி.இந்த இரு புகைப்படங்கள் அன்றை நாளில் பெரிதும் பேசபட்டது.

இந்த சூழலில் கலவரத்தில் ஈடுபட்டதால் அஷோக் பார்மர் அனைத்தையும் இழந்து, வீடின்றி நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்பட்டது. வழக்கில் சிக்கிய அவரை 2005-ல் நீதிமன்றம் விடுவித்தது. ஆனால் குஜராத் அரசு செய்த மேல்முறையீடு காரணமாக அவர் 2014-ம் ஆண்டுவரை வழக்கைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தனது வருமானம் அனைத்தையும் இழந்த மோச்சி திருமணமே செய்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. காலங்கள் கடந்தன வறுமை அவருக்குப் பல விஷயங்களை உணர்த்தின.அது இந்தியாவில் அனைவருக்கும் இடம் உண்டு, அனைவரும் இந்திய மக்களே, வேற்றுமையில் ஒற்றுமை, மதத்துவேஷம் கூடாது என்பது தான்.

இதற்கிடையில், இடைப்பட்ட காலத்தில் தலித் – இஸ்லாமிய ஒற்றுமைக்காகப்பாடுபடும் இயக்கத்தில் இணைந்த மோச்சி தான் செய்த கொடுமைகளுக்காகப் பகிரங்க மன்னிப்பு கேட்டார். மோச்சியின் பரிதாப நிலையை அறிந்த கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு செருப்புக் கடை வைக்க நிதியை அளித்துள்ளது. கடந்த வாரம் டெல்லி தர்வாஜா ஏரியாவில் மோச்சி செருப்புக் கடை திறந்தார்.அந்த கடையை திறந்து வைத்தவர் யார் தெரியுமா? கலவரத்தில் பாதிக்கப்பட்ட தையல் தொழிலாளி அன்வர் தான். அந்தக் கடையின் பெயர் (ஏக்தா சப்பல் கர்) ஒற்றுமை செருப்புக் கடை.

எனது நண்பர் மோச்சிக்காக பிரார்த்திப்பேன். அவர் புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார் இனி நன்றாக இருப்பார். நாங்கள் இருவரும் கடினமான நாட்களைக் கடந்து வந்துள்ளோம் என கடையைத் திறந்து வைத்த பின் குத்புதீன் அன்வர் பேசியுள்ளார்.
இது என் வாழ்க்கையின் மிகப்பெரிய நிகழ்வு, எனக்கென்று ஒரு வீடுகூட இல்லை. ஆனால் இந்தப் புதிய வாழ்க்கை அதை எனக்குப் பெற்றுத்தரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது’’ என்று மோச்சி கூறியுள்ளார்.

வேற்றுமையில் ஒன்று என்ற இந்தியாவின் தாராக மந்திரத்திற்கு ஏற்ப 2 மதங்களை மனிதநேயம் வென்ற நெகிழ்ச்சியான நிகழ்வாக அன்வர் மற்றும் மோச்சியின் வாழ்க்கை உள்ளது.

மேலும் படிக்க