March 30, 2023
தண்டோரா குழு
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோவை மாவட்ட தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான அன்னூர் பசூர் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது உயர் ரக போதை பொருளான மெத்தபெட்டமைன் (Methamphetamine)-ஐ வைத்திருந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த ஜின்சன் (29) மற்றும் ஷான்சன் (34) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ.24,000/- மதிப்புள்ள 8 கிராம் எடையுள்ள மெத்தபெட்டமைன் மற்றும் இரண்டு சக்கர வாகனம்-2 ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.