• Download mobile app
16 Feb 2025, SundayEdition - 3294
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பில் 78-வது சுதந்திர தின விழா முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது

August 15, 2024 தண்டோரா குழு

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் கௌரவ தலைவர் மாண்புமிகு முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகர் வழிகாட்டுதல் படி தமிழகம் முழுவதும் பல்வேறு மக்கள் நல பணிகளை சமூக சேவையாக இவ்வமைப்பின் நிறுவனத்தலைவர் ஆர்.கே.குமார் செய்து வருகின்றார்.

இதன் தொடர்ச்சியாக கோவை அன்னூர் பகுதியில் உள்ள காட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 78வது சுதந்திர தினத்தின் விழா,மரம் நடுவிழா,பள்ளி மாணவர்களுக்கு கல்வி கொடை வழங்கும் விழா என முப்பெரும் விழாவாக இவ்வமைப்பின் நிறுவனத்தலைவர் ஆர்.கே.குமார் தலைமையிலும், பொதுச்செயலாளர் வி.எச்.சுப்பிரமணியம், மாநில மகளிரணி தலைவி தேசிய ஒருங்கிணைப்பாளர் லதா அர்ஜுனன் டாக்டர் சி.ராதகிருஷ்ணன்,கதிரேசன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகர் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி சிறப்பித்து சிறப்புரையாற்றினார்.அதன்பின் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி கொடை வழங்கியதுடன்,மரம் நடு விழாவையும் துவக்கி வைத்தார்.மேலும் இப்பள்ளியில் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு பாராட்டு சான்று வழங்கினார் நீதியரசர் கற்பக விநாயகர்.

இதன் தொடர்ச்சியாக அனைவரையும் வரவேற்கும் விதமாக வரவேற்புரையை இவ்வமைப்பின் நிறுவனத்தலைவர் ஆர்.கே.குமார் வழங்க,வாழ்த்துரையை பொதுச்செயலாளர் வி.எச்.சுப்பிரமணியம், மகளிரணி தலைவி,தேசிய ஒருங்கிணைப்பாளர் லதா அர்ஜூனன் ஆகியோர் வழங்கினார்கள்.இந்த விழாவில் விழாவின் தொடக்க உரையை இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகசுந்திரம் ஆற்றினார்.இந்த விழாவில் துணை தலைவர் செந்தில்குமார்,இணை செயலாளர் ஜான்கிருஸ்டோபர்,விஜய் ராவ்,டிரவல்ஸ் ரமேஷ்,ராமஜெயம்,சந்திரசேகர்,செயற்குழு உறுப்பினர் அப்பு,விக்னேஷ் உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளர்கள் ஊராட்சி தலைவர் காயத்திரி பாலகிருஷ்ணன்,முன்னாள் தலைவர் எம்.கே.துரைசாமி,ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், கவுன்சிலர் ரோஜபாலு, சுமதிராஜேந்திரன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் ஏராளமானவர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் படிக்க