தேவையான பொருட்கள்:
காளான் – 1/2 கிலோ (சிறிய துண்டுகளாக வெட்டவும்)
உருளைக்கிழங்கு – 3 சிறியது (வேக வைத்து மசிக்கவும்)
வெங்காயம் – 2 (துண்டுகளாக நறுக்கவும்)
பச்சைப் பட்டாணி – ¼ கப் (வேகவைக்கவும்)
பச்சை மிளகாய் – 3 (துண்டுகளாக நறுக்கவும்)
இஞ்சி – 1 துண்டு (துண்டுகளாக நறுக்கவும்)
பூண்டு – 5 பல்லு (துண்டுகளாக நறுக்கவும்)
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்துமல்லி – தேவையான அளவு
மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – ½ தேக்கரண்டி
பிரட் தூள் – 1 1/2 கப்
முட்டை – 2
சமையல் எண்ணெய் – 4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
பாத்திரத்தில் எண்ணெயை விட்டு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன் நிறமாக வரும் வரை வதக்கவும். அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சியைச் சேர்த்து வதக்கவும். உப்பு தேவையான அளவு போட்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூளை சேர்த்து சிறிது நேரம் வரை நன்றாகக் கலக்கவும். நறுக்கிய காளான்கள், பச்சை பட்டாணி, கறிவேப்பிலையை சேர்க்கவும். ஒரு பாத்திரத்தை எடுத்து மசித்த உருளைக் கிழங்கைப் போடவும்.
செய்து வைத்த மசாலாவை இந்தப் பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலக்கவும். பின் நறுக்கிய கொத்தமல்லி இலையைச் சேர்க்கவும். முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அடிக்கவும். பிரட் தூள் தட்டில் போட்டு வைத்துக் கொள்ளவும். மசாலாவை சிறிய பந்துகள் போல் பிடித்து, தட்டி, அதை முட்டையில் முக்கி எடுத்து பிரட் தூளில் பிரட்டி பின் தடாவில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அதில் போட்டு இருபுறமும் சிவக்க்கும்வரை பொருத்திருந்து எடுக்கவும். சுவையான காளான் கட்லட் தயார்.
கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில் 1995ம் ஆண்டு பேட்ஜ் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்திப்பு
இந்தியாவின் கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை கௌரவித்த கேபிஆர் கல்வி நிறுவனங்கள்
கோவை வடவள்ளியில் பிரீத்வெல் கிளினிக் நுரையீரல் மற்றும் தூக்க பராமரிப்பு தொடர்பான சிகிச்சை மையம் புதிதாக தொடக்கம்
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு