• Download mobile app
23 Aug 2025, SaturdayEdition - 3482
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுவையான சிக்கன் தொக்கு செய்ய…!

August 13, 2018 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

சிக்கன் – கால் கிலோ
வெங்காயம் – 1
தக்காளி – 1
இஞ்சி,பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிட்டிகை
மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
பட்டை, லவங்கம் – தலா 2 துண்டுகள்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கருவேப்பிலை,கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை:

சிக்கனை கழுவி,சிறிய துண்டுகளாக வெட்டவும்.தக்காளி,வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். இஞ்சி,பூண்டை நசுக்கிப் போடலாம்.விழுது இருந்தால் அப்படியே சேர்க்கலாம்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை,லவங்கம் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளியைச் சேர்த்து வதகுங்கள்.தீயவிடாமல் தேவையெனில் சிறிது எண்ணெய் சேர்த்து கிளறுங்கள்.இதில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,உப்பு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டுங்கள்.வாசனை கமரும்போது சிக்கனைச் சேர்த்து வதக்குங்கள்.எல்லாவற்றையும் மிதமான தீயில் அடுப்பை வைத்துக் கொண்டு செய்யுங்கள்.

சிக்கனில் காரக் கலவை நன்றாக சேர்ந்து வரும்படி கலந்து விடவும்.தண்ணீர் விட வேண்டாம். சிக்கனில் இருக்கும் நீரும்,தக்காளி சாறும் எண்ணெய்யும் சிக்கனை வேக வைக்கும்.தீயாதபடி அவ்வப்போது கிளறுங்கள்.சிக்கன் நன்றாக வெந்தபிறகு மிளகுதூள் சேர்த்து கிளறி கருவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்குங்கள்.சுவையான சிக்கன் தொக்கு தயார்.

மேலும் படிக்க