• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எக் பாஸ்தா

February 11, 2017 koodal.com

தேவையான பொருட்கள்:

பாஸ்தா – 2 கப்.

இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீ ஸ்பூன்.

பெரிய வெங்காயம் – ஒன்று.

தக்காளி – 1/4 பாகம்.

முட்டை – 2.

குடைமிளகாய் – 1/4 பாகம்.

சீரகத்தூள் – அரை டீ ஸ்பூன்.

கரம் மசாலா – அரை டீ ஸ்பூன்.

உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் முதலியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
பாஸ்தாவை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, குடைமிளகாய், தக்காளி ஒன்றன்பின் ஒன்றாக தனித்தனியாக சேர்த்து வதக்கவும்.அதில் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, சீரகத்தூள் போடவும்.

நன்றாக வதங்கியதும் முட்டை சேர்க்கவும். முட்டை நன்றாக வதங்கியதும் வெந்த பாஸ்தா சேர்த்து சுருள விட்டு அடுப்பை அணைக்கவும். தேவை என்றால் காய்கறிகள் சேர்க்கலாம், சால்னா கூட சேர்க்கலாம். வித்தியாசமான சுவை கிடைக்கும். சுவையான எக் பாஸ்தா ரெடி.

மேலும் படிக்க