December 21, 2017
tamil.samayam.com
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 4 தேக்கரண்டி
கருவாடு துண்டுகள் – 10
பூண்டு – 6 பல்
வெங்காயம் – 1 நறுக்கியது
பச்சை மிளகாய் – 2
தக்காளி – 1
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
உப்பு -தேவைப்பட்டால்
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
முதலில் கருவாட்டை சுடுநீரில் போட்டு 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து வதக்கி, பின் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து பிரட்ட வேண்டும்.பிறகு அதில் 1-2 கப் தண்ணீர் ஊற்றி கிளறி, தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.அசத்தலான கிராமத்து கருவாட்டு தொக்கு ரெடி!!!