• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முருங்கைக்கீரை வடை

March 10, 2017 koodal.com

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி – 1/2 கப்.
ஆய்ந்த முருங்கை இலை – 1 கைப்பிடி.
எள் – 1 டீஸ்பூன்.
எண்ணெய் – 100 கிராம்.
பெரிய வெங்காயம் – 1.
பச்சைமிளகாய் – 2.
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

அரிசியை ஊற வைத்து, ஊறியதும் கெட்டியாக அரைக்கவும்.அதனுடன் முருங்கை இலை, உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி மாவில் சேர்க்கவும்.
பின்பு எள்ளையும் கலந்து நன்கு பிசையவும்.

வாழை இலையில் சிறிது எண்ணெய் தடவி பிசைந்த மாவை சிறு உருண்டையாக உருட்டி வடை போல் தட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு சுற்றி எண்ணெய்விட்டு முறுகலாக வேகவிட்டு எடுக்கவும். இது இரும்புச்சத்தும், புரதச்சத்தும் நிறைந்தது. கீரை சாப்பிடாத குழந்தைகள்கூட விரும்பிச் சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க