• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரிசி தேங்காய் பாயாசம்

May 19, 2017 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் – 1/2 கப்

பச்சரிசி – 3 டேபிள் ஸ்பூன்

வெல்லம் – 1/2 கப்

காய்ச்சிய பால் – 1/4 கப்

தண்ணீர் – 2 1/2 கப்

நெய் – 2 டீஸ்பூன்

ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்

முந்திரி – 6

உலர் திராட்சை – 10

செய்முறை:

முதலில் வெதுவெதுப்பான நீரில் வெல்லத்தை தட்டிப் போட்டு, லேசாக சூடேற்றி வெல்லம் கரைந்ததும், அதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அரிசியை நீரில் போட்டு நன்கு கழுவி, பின்னர் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மிக்சியில் ஊற வைத்துள்ள அரிசி மற்றும் தேங்காய் போட்டு, சிறிது தண்ணீர் உற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள கலவையைப் போட்டு, நெருப்பைக் குறைத்து, நன்கு கிளறி விட வேண்டும்.

கலவையானது ஓரளவு மென்மையாகி கெட்டியானதும், அதில் வெல்லப் பாகு சேர்த்து, 3 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பின் அதில் ஏலக்காய் பொடி சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

அதே நேரம் மற்றொரு அடுப்பில் நெய் ஊற்றி காய்ந்ததும், அதில் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து நன்கு வதக்கி விட்டு, அதனை பாயாசத்துடன் சேர்த்து இறக்கினால் அரிசி தேங்காய் பாயாசம் ரெடி!!!

மேலும் படிக்க