தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் – 1/2 கிலோ (சிறியது)
கடலை மாவு – 2 கப்
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
மிளகாய் – 8 (பொடியாக நறுக்கியது)
சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சமையல் சோடா – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – 1/2 கப்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
ஓமம் – 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் வெங்காயம், தக்காளி, மிளகாய், கொத்தமல்லி, சீரகப் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும். பின் அதனை இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு கத்திரிக்காயை நீரில் கழுவி, அதனை மலர் விரிவது போன்று நான்காக வெட்டிக் கொள்ளவும். பின் அதன் நடுவே அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை வைத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு பௌலில் கடலை மாவு, உப்பு, மிளகாய் தூள், சமையல் சோடா, ஓமம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியாக பேஸ்ட் செய்து கொள்ளவும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அனைத்து கத்திரிக்காய்களையும் போட்டு 5 நிமிடம் குறைவான தீயில் கிளறி இறக்கி, தனியாக வைத்துக் கொள்ளவும்.
இறுதியில் அதே வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றி, பின் ஒவ்வொரு கத்திரிக்காயையும் கடலை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், கத்திரிக்காய் பஜ்ஜி ரெடி!!!
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்