• Download mobile app
26 Feb 2026, ThursdayEdition - 3669
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முட்டை கட்லெட் செய்ய…!

April 24, 2019 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

முட்டை – 4,
கறி மசாலா தூள் – 2, ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
பெரிய வெங்காயம் – 1,
பிரட் – 4 துண்டு
கார்ன் பிளார் மாவு – 1/2 ஸ்பூன்
கடலை மாவு – 2 ஸ்பூன்

செய்முறை:

முதலில் முட்டைகளை வேகவைத்து பிறகு அதனை தோல் உரித்து ஒரு பவுலில் போட்டு கையால் பிசைந்து கொள்ளவும். அதனுடன் கறிமசாலா, உப்பு, கொத்தமல்லி மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்து சிறிதளவு நீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பிறகு இதனை நீளவாக்கில் உருண்டையாக சின்ன, சின்ன துண்டுகளாக பிடிக்க வேண்டும். பிறகு பிரட் துண்டுகளை மிக்சியில் போட்டு, தூளாக அரைத்து அதனுடன் கார்ன் மாவு சேர்த்து வைத்து கொள்ளவும்.

மற்றொரு தட்டில் கடலை மாவை சிறிதளவு நீர் சேர்த்து கலந்து ஏற்கனவே பிடித்து வைத்துள்ள துண்டுகளை கடலை மாவு தட்டில் உருட்டி எடுத்து பிறகு அதனை பிரட் தூளில் உருட்டிக் கொள்ள வேண்டும். அனைத்து தூண்டுகளையும் இவ்வாறாக தயார் செய்து வைத்து கொள்ளவும்.

பிறகு ஒரு கடாயில் தயார் செய்த கட்லெட் துண்டுகள் மூழ்காத அளவிற்கு எண்ணெய் ஊற்றி சூடேற்றி அந்த கட்லெட் துண்டுகளை போடவும். இருபுறமும் வேகும் வகையில் திருப்பி விட்டு 1 நிமிடம் வரை எண்ணெய்யில் போட்டு எடுத்தால் சுவையான முட்டை கட்லெட் தயார்.

மேலும் படிக்க