• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மலபார் முட்டை கறி ரெசிபி!

September 7, 2018 tamil.samayam.com

தேவையான பொருட்கள்:

முட்டை – 6,

வெங்காயம் – 2,

இஞ்சி, தக்காளி – 2,

ப. மிளகாய் – 4,

பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி,

மிளகாய் தூள், மல்லி தூள்- தலா 1 தேக்கரண்டி,

மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி,

கரம் மசாலா – அரை தேக்கரண்டி,

முதல் தேங்காய் பால் – ஒரு கப்,

இரண்டாவது தேங்காய் பால் – ஒரு கப்,

எண்ணெய் – 2 மேசைக்கரண்டி,

கடுகு, சீரகம் – தலா கால் தேக்கரண்டி,

கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முட்டையை வேக வைத்து ஓடெடுத்து பாதியாக நறுக்கி வைக்கவும்.பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கிய பின், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.பின்னர் குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டவும்.

பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.மசாலா நன்கு வதங்கிய பின் இரண்டாவது தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.மசாலா வாசம் போனதும் முட்டையை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும்.கடைசியாக முதல் தேங்காய பால் சேர்த்து கொதி வர துவங்கியதும் எடுக்கவும்.

மேலும் படிக்க