• Download mobile app
24 Aug 2025, SundayEdition - 3483
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பச்சரிசி பாயசம்

March 23, 2018 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 1/4 கப்

வெல்லம் பொடித்தது – 1 கப்

முந்திரி – 25 கிராம்

தேங்காய்த்துருவல் – 2 கப்

ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்

நெய் – 1 டீஸ்பூன்

தேங்காய் – 1 டேபிள்ஸ்பூன் (சிறிய துண்டுகளாக)

செய்முறை:

அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, கழுவி, தண்ணீரை வடிகட்டி விட்டு, தேங்காய்த்துருவலுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து  எடுத்து வைத்து கொள்ளவும். வெல்லத்தில் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்கவிட்டு, வெல்லம் கரைந்ததும் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 4 கப் தண்ணீரை விட்டு நன்றாகக் கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது  அடுப்பை சிறு தீயில் வைத்து, அரைத்து வைத்துள்ள அரிசி, தேங்காய் விழுதைச் சேர்த்துக் கிளறி விடவும். சற்று கெட்டியாகும் வரும்வரை, கிளறிக் கொண்டே  இருக்கவும்.

பின்னர் அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை விட்டு, மீண்டும் நன்றாகக் கிளறி விடவும். பாயசம் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், ஏலப்பொடியைத் தூவி இறக்கி வைக்கவும். ஒரு டீஸ்பூன் நெய்யில் பொடியாக நறுக்கிய தேங்காய் மற்றும் முந்திரியை போட்டு சிவக்க வறுத்து பாயசத்தில் சேர்த்துக் கலந்து  பரிமாறவும். சுவையான சுலபமான பச்சரிசி பாயசம் தயார்.

 

மேலும் படிக்க