• Download mobile app
23 Aug 2025, SaturdayEdition - 3482
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேங்காய் லட்டு

June 21, 2017 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

தேங்காய் – 2 கப் (துருவியது)
கண்டென்ஸ்டு மில்க் – 2
கப் சர்க்கரை – 1
கப் ஏலக்காய் – 1
டீஸ்பூன் பாதாம் – 4-5
வெண்ணெய் – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். குறிப்பாக அப்படி கொதிக்கும் போது அவ்வப்போது லேசாக கிளறி விட வேண்டும்.

பின்னர் அதில் துருவிய தேங்காய் சேர்த்து, நன்கு கிளறி 10-15 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும்.

பின்பு அதில் சர்க்கரையை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கிளறி விட்டு, பின் அதில் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கி விட வேண்டும்.

கலவையானது மிதமான சூட்டில் இருக்கும் போது, கையில் வெண்ணெய் தடவி, அதனை லட்டுகளாக பிடித்து, ஒவ்வொன்றின் மீது பாதாமை வைத்தால், சுவையான தேங்காய் லட்டு ரெடி!!!

மேலும் படிக்க