• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செட்டிநாடு எலும்பு குழம்பு

July 14, 2017 tamilboldsky.com

தேவையான பொருட்கள்:

மட்டனுக்கு…

மட்டன் எலும்பு – 1/2 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 1 கப்

குழம்பிற்கு…

வெங்காயம் – 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3 (நீளமாக கீறியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்ழுன்
தேங்காய் – 1/2 கப் (துருவியது)
தக்காளி – 3 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு – 2 (துண்டுகளாக்கப்பட்டது)
முருங்கைக்காய் – 1 (நறுக்கியது)
தண்ணீர் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 1/4 கப்
பட்டை – 3 இன்ச்
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
ஏலக்காய் – 5
கிராம்பு – 5
பிரியாணி இலை – 1
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி, குக்கரில் போட்டு, மட்டனுக்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு, தீயை குறைத்து, 15 நிமிடம் மீண்டும் வேக வைத்து, பின் அடுப்பில் இருந்து குக்கரை இறக்க வேண்டும்.

பின்னர் மிக்ஸியில் தேங்காயைப் போட்டு பேஸ்ட் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.

பின்பு அதில் வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி, மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து கிளறி, உருளைக்கிழங்கு, முருங்கைக்காய் மற்றும் குக்கரில் உள்ள மட்டனை அப்படியே நீருடன் ஊற்றி, அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டையும் சேர்த்து கிளறி, 25-30 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, கொத்தமல்லித் தூவி இறக்கினால் செட்டிநாடு எலும்பு குழம்பு ரெடி!!!

மேலும் படிக்க