• Download mobile app
30 Aug 2025, SaturdayEdition - 3489
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுவையான வெஜிடபிள் வடை செய்ய…!

February 7, 2019 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

விருப்பமான காய்கள் – 3 வகைகள் (கேரட், பீன்ஸ், கோஸ்)
பொட்டுக்கடலை – 2 மேஜைக்கரண்டி
அரிசி மாவு – 2 கப்
மிளகாய் வற்றல் – 8
உப்பு – சிறிது
எண்ணெய் – போதுமானது
செய்முறை:

காயை சுத்தமாகக் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு அது கொதித்ததும் நறுக்கிய காய் துண்டுகளை அதில் சேர்த்து நன்கு வேக விடவும். வெந்ததும் அடுப்பை விட்டு இறக்கவும்.

பொட்டுக்கடலை, மிளகாய் வற்றல், அரிசி மாவு, உப்பு எல்லாம் உரலில் அல்லது மிக்ஸியில் போட்டு பவுடராக்கிக் கொள்ளவும். இந்த பவுடரை வெந்த காயுடன் சேர்த்து கலந்து போதிய தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கொதிக்கத் தொடங்கியதும் கலவையை வடைகளாகத் தட்டிப்போட்டு வெந்ததும் எடுத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் இதனுட வெங்காயம் சேர்த்து கொள்ளலாம்.

மேலும் படிக்க