• Download mobile app
23 Aug 2025, SaturdayEdition - 3482
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுவையான பஞ்சாபி ஸ்பெஷல் பனீர் குல்சா எப்படி வீட்டில் தயாரிக்கலாம்??

June 24, 2017 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

சுத்திகரிக்கப்பட்ட மாவு – 3 கப்
சர்க்கரை – 1 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
வெண்ணெய் – 5 டீஸ்பூன்
பால் – 1 கப்

உப்பு ஸ்டப்பிங்கிற்கு:

பன்னீர் – 200 கிராம் (பிசைந்தது)
பச்சை மிளகாய் – 4 (நறுக்கியது)
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை – 2 டீஸ்பூன் (நறுக்கியது)
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சாட் மசாலா – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 1 (நறுக்கியது)

செயல்முறை:

ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் மாவு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்க்கவும். அதன் பின்னர் இவை இரண்டையும் நன்கு கலக்கவும். இந்த மாவு கலவையை தனியே எடுத்து வைக்கவும்.

இப்போது ஒரு பால் ஜாடி எடுத்து அதில் பால், வெண்ணெய், சர்க்கரை, மற்றும் உப்பு சேர்க்கவும். அதன் பின்னர் அந்த கலவையை நன்றாக கலக்கவும்.

இப்பொழுது, தனியே எடுத்து வைத்துள்ள மாவு கலவையில், இந்த பால் கலவையை ஊற்றி நன்கு பிசையவும். மாவு மிகவும் மென்மையாக வரும் வரை பிசையவும். அதன் பின்னர் பிசைந்து வைத்த மாவை ஒரு மென்மையான மெல்லிய ஈரத் துணி கொண்டு மூடி வைக்கவும். சுமார் 40 நிமிடங்கள் பொருத்திருக்கவும்.

காத்திருக்கும் நேரத்தில் நாம் ஸ்டப்பிங்கிற்கு தேவையான பொருட்களை தயாரிக்கலாம். ஒரு பெரிய கிண்ணத்தில் பிசைந்து வைத்த பன்னீர், வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, கரம் மசாலா தூள், மிளகாய் தூள் மற்றும் சாட் மசாலா போன்றவற்றை சேர்க்கவும்.

அதன் பின்னர் அனைத்து பொருட்களையும் நன்கு கலக்கி அதை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது பன்னீர் குல்ச்சாவிற்கு தேவையான ஸ்டப்பிங் தயாராக உள்ளது.

ஒரு உருண்டை மாவை எடுத்து ஒரு தடித்த வட்டுவாக தேய்க்க வேண்டும். வட்டத்தை மிகப் பெரியதாக செய்ய வேண்டாம்.

இப்போது நீங்கள் தயாராக வைத்துள்ள ஸ்டப்பிங் பொருட்களை வட்டத்தின் நடுவில் வைத்து மாவை மூட வேண்டும்.

அதன் பின்னர் ஸ்டப்பிங் செய்துள்ள மாவை தேய்த்து வட்ட வடிவமாக மாற்றவும். இதில் மிக கவனமாக செயல்பட வேண்டும். ஏனெனில் ஸ்டப்பிங் செய்துள்ள பொருட்கள் வெளியே பிதுங்கி வராமல் கவனமாக தேய்க்க வேண்டும்.

இப்பொழுது தோசைக் கல்லில் குல்ச்சாவை வைத்து சுட வேண்டும்.

அடுப்பில் இருந்து குல்ச்சாவை எடுத்த பின்னர் அதன் மீது சிறிது வெண்ணெய் தடவ வேண்டும். இப்பொழுது உங்களின் பன்னீர் குல்ச்சா பறிமாறத் தயாராக உள்ளது. நீங்கள் குல்ச்சாவை நான்கு துண்டுகளாக வெட்டி, அதை உங்களுக்கு பிடித்த சட்னியுடன் சாப்பிட்டு மகிழவும்.

மேலும் படிக்க