சுவையான சத்தான வாழைப்பூ சப்பாத்தி ரெசிபியை, நம் வீட்டிலேயே எளிதாக எப்படி சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்!!
தேவையானவை:
கோதுமை மாவு – கால் கிலோ, பாசிப்பருப்பு – 5 டீஸ்பூன், நறுக்கிய வாழைப்பூ – ஒரு கப் (ஒரு கைப்பிடி), சின்ன வெங்காயம் – 7, பச்சைமிளகாய் – ஒன்று, பூண்டு – 2 பல், சீரகம் – 2 சிட்டிகை, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு, தயிர் – 2 டீஸ்பூன்
செய்முறை:
வாழைப்பூவை நார் நீக்கி பொடியாக நறுக்கிவைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவைத்து தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.
இத்துடன் வாழைப்பூ, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, சீரகம், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி இறக்கவும். சூடு ஆறியதும், மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.
இதனை கோதுமை மாவுடன் சேர்த்து, தயிர், உப்பு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். பிறகு சப்பாத்திகளாக சுட்டெடுத்துப் பரிமாறவும்.
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றத்தை தடுக்கும் விழிப்புணர்வு ஓட்டம் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கிறது
கோயம்புத்தூர் ஸ்பெக்ட்ரம் ரோட்டரி கிளப்பின் சார்பில் பெண்களுக்கு மின்சார ஆட்டோ வழங்கப்பட்டது
சாய்பாபா காலனி மேம்பால பணிகளுக்காக இரவு நேர போக்குவரத்தில் முக்கிய மாற்றம்
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை ஹாப்ஸ் ஏவியேஷன் அகாடமி சார்பில் அஞ்சலி
ஈஷாவில் ‘26-வது தியானலிங்க பிரதிஷ்டை தின’ விழாவை முன்னிட்டு நடைபெற்ற சர்வமத இசை அர்ப்பணிப்பு!
மேட்டுப்பாளையம் ஸ்ரீ தியாகராய நிருத்ய கலாமந்திர் நாட்டிய பள்ளியின் மாணவி ச.ஸ்ரீஹரிணிகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா