• Download mobile app
23 Aug 2025, SaturdayEdition - 3482
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சளியை விரட்டும் இஞ்சி குழம்பு எப்படி செய்வது…?

July 27, 2019 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு – 2 ஸ்பூன்
கடலை பருப்பு – 2 ஸ்பூன்
சாம்பார் பொடி – 2 ஸ்பூன்
வெங்காயம் – 3
புளி – சிறிதளவு
பூண்டு – 20 பல்
இஞ்சி – 25 கிராம்
வறுத்து பொடித்த வெந்தயம் – 1 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
பெருங்காயம் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புளி – சிறிதளவு
செய்முறை:

முதலில் இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும். புளியை தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து கொள்ளவும்.

கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்க்கவும். அடுத்து 1 டம்ளர் தண்ணீர், புளி கரைத்த தண்ணீர், சாம்பார் பொடி, பெருங்காய தூள், வறுத்த வெந்தய பொடி, உப்பு எல்லாம் சேர்க்கவும்.

நன்கு கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். நல்ல மணமுள்ள இஞ்சி குழம்பு தயார். இந்த இஞ்சி குழம்பு வயிற்று உபாதைகளுக்கு மிகவும் நல்லது.

மேலும் படிக்க