• Download mobile app
24 Aug 2025, SundayEdition - 3483
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காரசாரமான கிரீன் சிக்கன் வறுவல் ரெசிபி

May 17, 2018 tamilsamayam.com

தேவையான பொருட்கள்:

எலும்பு இல்லாத சிக்கன் – அரை கிலோ,
புதினா இலைகள் – இரண்டு கைப்பிடி,
கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி,
பூண்டு – 15 பல்,
இஞ்சி – சிறிய துண்டு,
பச்சை மிளகாய் – 4,
மிளகு தூள் – 1 ஸ்பூன்,
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்,
சோள மாவு – இரண்டு ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – பொரிக்க.!

செய்முறை:

சிக்கனை நன்கு கழுவி வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவேண்டும்.புதினா, கொத்தமல்லி தழையை நன்றாக கழுவி வைக்கவும்.மிக்சியில் புதினா இலைகள், கொத்தமல்லி, ப.மிளகாய், இஞ்சி,பூண்டை போட்டு நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.

அரைத்த விழுதை சிக்கன் மேல் போட்டு அதனுடன் சோள மாவு, எலுமிச்சை சாறு, மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.அடுப்பில் வாணலியை வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்யை ஊற்றி காய்ந்தவுடன் சிக்கனை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு முறுகலாக பொரித்து எடுக்கவும்.சிக்கன் நன்றாக வெந்ததும் கடாயில் இருந்து எடுக்கவும்.

மேலும் படிக்க