தேவையான பொருட்கள் :
முருங்கைக்காய் – 1
இறால் – ¼ கிலோ
நறுக்கிய வெங்காயம் – 2
நறுக்கிய தக்காளி – 2
பொடித்த மிளகு, சீரகம் – 2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
கரம் மசாலா – ½ ஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
அரைத்த தேங்காய் விழுது – 2 ஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
கடுகு – ½ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,கடுகு,கருவேப்பிலை போட்டு தாளித்த பின்,பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் கொஞ்சம் வதங்கியவுடன் உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள்,பொடித்த மிளகு,சீரகம் சேர்த்து வதக்கவும்.பின்,அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி நன்கு வதக்கியவுடன்,முருங்கைக்காய், இறால் சேர்த்து கிளறி விடவும்.
5 நிமிடம் கழித்து கரம் மசாலா சேர்த்து,தேவையான அளவு தண்ணீர்,அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கடாயை மூடி,15 நிமிடம் அடுப்பில் சிம்மில் வைத்து வேக விடவும்.எண்ணெய் மேலே மிதந்து வந்தவுடன் இறக்கவும்.சுவையான இறால் முருங்கைகாய் கிரேவி தயார்!!
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது