• Download mobile app
23 Aug 2025, SaturdayEdition - 3482
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இஞ்சி பிரட் லோஃப் கேக்

August 25, 2018 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

மைதா – 1 1/2 கப்.

பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்.

பட்டை தூள் – 1 டீஸ்பூன்.

இஞ்சி பொடி – 1 டேபிள் ஸ்பூன்.

கிராம்பு தூள் – 1 டீஸ்பூன்.

உப்பு -1/4 டீஸ்பூன்.

பால் – 1/2 கப்.

எலுமிச்சை சாறு – 2-3 துளிகள்.

உப்பில்லா வெண்ணெய் – 115 கிராம்.

நாட்டுச்சர்க்கரை – 1 1/2 கப்.

தண்ணீர் – 3 டேபிள் ஸ்பூன்.

முட்டை – 2.

வென்னிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்.

செய்முறை:

முதலில் ஓவனை 180 டிகிரி செல்சியஸில் சூடேற்ற வேண்டும்.பின் பிரட் லோஃப் பேனில் வெண்ணெய் தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு ஒரு பௌலில் மைதா,பேக்கிங் சோடா,பட்டை பொடி,இஞ்சி தூள் கிராம்பு பொடி மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின் மற்றொரு பால் மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்து வேறொரு பௌலில் 1/2 கப் நாட்டுச்சர்க்கரை மற்றும் தண்ணீர் ஊற்றி,நாட்டுச்சர்க்கரையை கரைய வைக்க வேண்டும்.அதற்குள் மற்றொரு பௌலில் வெண்ணெய் மற்றும் மீதமுள்ள ஒரு கப் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை அடிக்க வேண்டும்.

நாட்டுச்சர்க்கரை நன்கு கரைந்த பின்னர்,ஒவ்வொரு முட்டையாக உடைத்து ஊற்றி நன்கு அடிக்க வேண்டும்.பின் வென்னிலா எசன்ஸ் சேர்த்து கிளறி விட வேண்டும்.

இறுதியில் ஒரு அகன்ற பௌலில் பாதி மைதா கலவையை போட்டு,அதில் பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து,வென்னிலா எசன்ஸ் சேர்த்து அடித்து வைத்துள்ள நாட்டுச்சர்க்கரை கலவை மற்றும் வெண்ணெய் கலவையை உடன் சேர்த்து நன்கு கிளறி,பின் மீதமுள்ள மைதா கலவையை சேர்த்து, கட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்து அந்த மாவை பிரட் லோஃப் பேனில் ஊற்றி,45-50 நிமிடம் பேக் செய்து,கேக் ரெடி ஆன பின்னர் அதனை இறக்கி 5 நிமிடம் குளிர வைக்க வேண்டும்.பின் அதனை பேனில் இருந்து தட்டிற்கு மாற்றி,அதன் மேல் சர்க்கரை பொடியைத் தூவி,துண்டுகளாக்கிக் கொண்டால்,சுவையான இஞ்சி பிரட் லோஃப் கேக் ரெடி!!!

மேலும் படிக்க