• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆரோக்கியம் தரும் வேப்பம் பூ சூப்…!

July 10, 2018 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

வேப்பம் பூ – 4 டீஸ்பூன்
வெண்ணெய் – 4 டீஸ்பூன்
காய்கறிகள் வேக வைத்த தண்ணீர் – 1 கப்
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்
பனங்கற்கண்டு – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை:

வாணலியில் வெண்ணெய் காய்ந்ததும்,அதில் வேப்பம் பூவைப் போட்டு வறுக்கவும்.இதனுடன் பனங்கற்கண்டு,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விடவும்.பின்பு இறக்கி ஒரு மெல்லிய துணியில் வடிகட்டவும்.

இதனுடன் காய்கறிகள் வேக வைத்த தண்ணீர்,உப்பு,மிளகுத்தூள்,எலுமிச்சைச் சாறு கலந்து பருகலாம்.கசப்பே இல்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஆரோக்கியம் தரும் சூப் இது.

மேலும் படிக்க